பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்கலத்திலே பழங்களைத்தான் பார்த்துத்தேடும் பயல்களைத்தான் கிழங்களைத்தான் உதைக்கவேண்டும் கெடுதினைப்போ அதிகமப்பா ஒழுங்குபட வாழைச்சீப்பில் ஒன்றுவிழுக்காடு தந்தாள் விழுங்கிடவே அண்ணாவுக்கு மீத்துக்கொடுக்க மறைப்பதென்ன ?

என்று கவிதை பாடித் தந்தையிடம் நீட்டினார். பிஞ்சுப்

பருவத்தில் சுப்புரத்தினம் கவிஞராக அரும்புவதை இங்குக் காண்கிறோம்.

சுப்புரத்தினம் கவிதை எழுதக்கூடியவன் ' என்று பாரதி திருவாய் மலர்ந்தருளியதும், ' எங்கெங்குக் காணினும் சக்தியடா ! என்ற பாடலைப் பாரதி பாணியில் பதினாறு வரிப்பாட்டாக எழுதிக் காட்டினார் சுப்புரத்தினம். இங்கே பதினெட்டு வயதுக் கட்டிளங்காளை, கவிதைத் துறையில் பேரரும்பாகத் திரட்சியடைவதைக் காண்கிறோம்.

கதர்த் துணியைத் தோளில் சுமந்த வண்ணம் தேசியப் பாடல்கள் பாடியபோதும், வீர ைச வ ரா. க வெந்த வெண்ணிறனிந்து சுப்பிரமணியர் துதியமுதை வண்ணப் பாடல்களாக ஒத்தறுத்துத் தாளமிட்டுப் பாடியபோதும் சுப்புரத்தினம் கவி ஞ ரா. க க் கட்டவிழ்வதைக் கா ணு கின்றோம்.

பாரதி பாட்டின் நுட்பம் அறிந்து, புரட்சிக் கவியும், சஞ்சீவி பர்வதத்தின் சா ர லு ம், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டும் எழுதியபோது, சுப்புரத்தினம் தமிழகம் எங்கும் கவிதை மணம் பரப்பும் புரட்சிக்கவிஞராக மலர்ச்சி யடைவதைக் காண்கிறோம். விரைந்த அவர் கவிதைப் பயணம், அவர் மூச்சு நிற்கும் வரை தொடர்ந்தது.

12