பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தச்சிவப்பு ரோஜாவும் வெள்ளைக்குமுதமும் லார்காவின் புதிய படைப்புக்களுக்கும், பா ட் ட ரு வி பழமையான ஆண்டலூசியக் கிராமியப் பாடல்களுக்கும் குறியீடுகள்.

ஊர்பேர் தெரியாத நாட்டுப்புறக் கவிஞர்களின் கவிதை யாற்றலை லார்கா பெரிதும் வியந்து போற்றுகிறான். ஓரிரண்டு வரிகளில் மனிதவாழ்வின் உணர்ச்சி மயமான கணங்களை அ பூர் வமாக ச் சித்தரிக்கும் அவர்கள் பேராற்றலை நினைந்து நினைந்து மகிழ்ச்சியில் திளைப்பது அவன் வழக்கம்.

நிலவு

வேலிக்குள் அடைக்கப்பட்டது. என் காதலும் மடிந்தது.

இந்த நாட்டுப் பாடல் வரிகளைப் படித் த லார்கா, நாட்டுப்புற மக்கள் விரும்பிப் பாடும் இந்த இரண்டு வரிகளில் புதைந்து கிடக்கும் சுவையான புதிர், மிக எளிமையானது : சுவையானது : தூய்மையானது. இந்தப் புதிர்ச்சுவை புகழ்பெற்ற மேட்டர்லிங்க் நாடகத்திலும் கிடையாது, ' என்று வியந்து பா ரா ட் டு கி றான். உண்மைதான் ! இவ்விரண்டு வரிகளில் தோன்றும் மின்னல் வெட்டு, கொடிக் கொடியாகவன்றோ படி ப்ப வர் உள்ளத்தில் படர்ந்து பரவசமூட்டுகிறது.

லார்கா தனக்குத்தேவையான மூலப் பொருள்களையும், உணர்வுகளையும் பழைய கிராமியப் பாடல்களில் இருந்து பெற்றாலும், இருபதாம் நூற்றாண்டுப் புதிய சிந்தனை களும் (Modern Thoughts) கவிதை நுட்பங்களும் அவன் படைப்பில் மலிந்து காணப்படுகின்றன. பழைய மரபின்

I 42