பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படையில் நீ ரூ ற் றைப் பற்றிப் பாடிய லார்கா கடலைப் பற்றிப் பாடும்போது

கடல் -

தொலைவிலிருந்து சிரிக்கிறது ;

தன்னுடைய துரைப் பற்களைக் காட்டி வான் உதடுகளை விரித்துச் சிரிக்கிறது -

என்று குறிப்பிடுகிறான். லார்கா இதில் கையாண்டிருக்கும் தண்ணிர்ப் படிமம் (water imagery) மிகப் புதுமையாக அமைந்து படிப்பவரை வியக்க வைக்கிறது.

மக்களுக்கு இயற்கைப் பொருள்களின் பண்புகளையும், இயற்கைப் பொருள்களுக்கு மக்களின் பண்புகளையும் ஏற்றிப் பா டு ம் இவரது தற்குறிப்பேற்றக் கற்பனைப் புனைவுகள் மிகவும் சுவையானவை. காய்ந்த இலைச் சருகுகள் ஒசையிடுவதை 'இறக்கும் இலைகள் அழுகின்றன’ என்று குறிப்பிடும்போதும், மிக உயரமான பாப்ளார்மரம் காற்றடித்து வானில் அசைவதை 'தனது நூறடிக்கையால் (centenarian hand) பாப்ளார் மரம் நிலவை அடிக்கிறது’ என்று குறிப்பிடும்போதும், கலங்காத மனநிலையோடு வாழ விரும்பும் தனது விருப்பத்தை 'வேர்களைப் பூமியின் ஆழத்திற்குச் செலுத்தி, எந்தப் புயலுக்கும் அசையாமல் வீறுகொண்டு தனித்து நிற்கும் ஒக் மரமாகக் குறிப்பிடும் போதும், அவன் கற்பனை ஆற்றல் சுவைத்து மகிழக் கூடியதாக உள் ளது. r -

லார் காவைப் பெரிய மேதை என்று கூற மு. டி யாது. அவன் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பியக் கவிஞர் பலர், பெரும் மேதைகளாக இருந்திருக்கிறார்கள். ஆனால்

1 4 3