பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி, பார தி தா சன் தொடர்பு த மிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை ; பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வரலாற்று நிகழ்ச்சி. புதுவையில் நீண்ட நாட்களாகத் தமிழ்ச்சங்கம் இயங்கிக் கொண்டு இருந்தது. பெரும்புலவர்களும், ஆசுகவிகளும் புதுவையில் நிறைந்திருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதையின் போக்கையே மாற்றி, அதற்குப் பெரிய மறு மலர்ச்சியைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த பாரதி யை யாரலும் இனங்கண்டு கொள்ளமுடியவில்லை. பாரதி யை இலக்கணம் தெரியாதவன் என்று இகழ்ந்து பேசி, அவர்மீது சேற்றை அள்ளி வீ சினர். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, பா ர தி யி ன் ஆற்றலைப் பாரதிதாசனால் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது.

உள்ளங்கலந்த இரண்டு கவிஞர்களின் கூட்டுறவு, கனிந்த காதலர்களின் கூட்டுறவைவிட இனிமையானது. கனவு களில் வாழும் அக்கவிதைக் காதலர்களால், இலையுதிர் காலத்தையும் இளவேனிலாக மாற்றிக்கொள்ள முடியும். பேச்சுத் தென்றலால் தடவி உள்ளத்தில் புல்லரிப்புகளைத் தோற்றுவித்துக் கொள்ள முடியும். ஈனமான இவ்வுலகத் துன்பங்களைத் தாண்டிக்குதித்து, ஞானரதத்தில் பறக்க முடியும். பாரதியும் பாரதிதாசனும் இதைத்தான் செய்தார்கள்.

மனிதர் வீடு பிடிக்காததால், பாரதியும் பாரதிதாசனும் இயற்கை வீட்டில் உலாவ வாழைக்குளம், தாண்டி அடர்ந்த தென்னந்தோப்பும், நீர் ஊற்றும் சூழ்ந்த இடத்தைத் தேடிச் சென்று கொண்டிருக்கின்றனர். நண்பர் பினாகபாணி குழந்தையின் சாவு எதிரில் வந்தது. ஏமாற்றத்தோடு கவிஞர் இருவரும் சாவு ஊர்வலத்தில் கலந்து கொள் கின்றனர். - -

፬ ?