பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரிரு நாடகங்களிலும் பிர தி ப வி. க் க க் காணலாம். ஏவாள், ஆதாம் உடம்பின் ஒர் அங்கம் தானே ? அப்படியென்றால் ஆதாமும் ஏ வாளும் வேறல்லவே ? பின் ஏன் உடலுறவில் ஆண் பெண் எ ன் ற பேதம் ? என்பது லார்காவின் விசித்திரமான வாதம் !

அமெரிக்காவில் இருந்தபோது, அவன் எழுதிய சர்ரியலிசக் கவி ைத க ள் நியூயார்க்கில் கவிஞர் ( The Poet in New-York ) என்ற தலைப்பில், லார்க்காவின் இறப்புக்குப் பிறகு வெளியிடப்பட்டன. இக்கவிதைகள் பிரெஞ்சு சர்ரியலிசக் கவிதைகளினின்றும் மாறுபட்டு, லார்காவின் தனித்தன்மையோடமைந்திருக்கின்றன. இக்கவிதைகளில் உள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பை ( Tension ) மற்ற சர்ரியலிசக் கவிதைகளில் காணமுடியாது. இக்கவிதைகள் வாழ்க்கையின் அ டி ப் படை உண்மைகளின்றும் ( Solid Reality ) விலகாத அடிமனக் காட்சிகளைச் சித் த ரி க் கின்றன.

முரட்டுக் காளைகளோடு போரிடும் வீரவிளையாட்டு, ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு. நம் நாட்டில் திரைப்பட நடிகர்களுக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து (Star Value) அந்த நாட்டுக் காளைப்போர் வீரர்களுக்கு உண்டு. ஸ்புெயின் நாட்டுப் புகழ்பெற்ற காளைப்போர் வீரரும் தனது ஆருயிர் நண்புருமான மெஜியாஸ் காளைப் போரில் இறந்தபோது, லார்கா எழுதிய இரங்கற்பாடல் தான், அவன் படைப்பில் ஒப்பற்றது என்று எல்லாராலும் பாராட்டப்படுகிறது.

அவன் முகத்தைக் கைக் குட்டையால் மூடுவதை

நானவிரும்ப வில்லை. கைக்குட்டையை

எடுத்துவிடுங்கள்.

I 50