பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் -

சுமந்து செல்லும் சாவு

அவனுக்கு

நன்கு

அறிமுகம் ஆகட்டும்.

என்று பாடுகிறான் லார்கா. வீரன் சாவைக் கண்டு அஞ்சி முகத்தை மூடக் கூடாதல்லவா ?

துவளாத துணிச்சலும் பெருமிதமும் மிக்க

ஒர் - ஆண்டலூசிய வீரன் இவனைப் போல் பிறக்க இன்னும் -

எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகலாம்.

அவன் புகழைப் பாடும் என்னுடைய ஏக்க வரிகள்

ஆலிவ் மரங்களின் இடையே ஒரு - சோகத் தென்றலாக

வீசட்டும்.

மெஜியாஸ்"க்கு எழுதப்பட்ட இக் க ல் ல ைற வரிகள் (epitaph), இளமையில் பரிதாபமாகக் கொலை செய்யப் பட்ட லார்காவுக்கும் மிகப் பொருத்தமாக அமைந் திருக்கின்றன.

லார்காவை நேரில் பார்த்துப் பேசிப் பழகிய சமகாலக் கவிஞர்களும், கலைஞர்களும் அவனை வியந்து கூறிய பாராட்டுரைகள் செவிக்கும் சிந்தைக்கும் தேன்விருந்து களாக இனிக்கின்றன.

1 5 I