பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பக்கம் வந்து புகுந்துவிடும் - இந்தி

எத்தனை பட்டாளம் கூட்டிவரும் ? அற்பமென்போம் அந்த இந்திதனை - அதன் ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம் எங்கள் உடல்பொருள் ஆவியெல்லாம் - எங்கள்

இன்பத் தமிழ்மொழிக்கே தருவோம் ! மங்கை ஒருத்தி தரும்சுகமும் - எங்கள்

மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - நமை

மாட்ட நினைக்கும் சிறைச்சாலை ! ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே - உயிர்

இவ்வுடலை விட்டு நீங்கும்வரை !

இந்தப் பாடல் வரி ஒவ்வொன்றும் ஒரு வெடிகுண்டு. சொற்கள் கவிதையில் வந்து உட்காரும்போது, சாட்டை வீச்சுக்களாக விழுகின்றன. உவமைகள் பலாச் சுளை களாகத் தித்திக்கின்றன. ஒப்பற்ற இந்தக் க வி ைத மின்னலைப் பிடித்து, வரலாற்றுச் சட்டத்தில் அடைத்து இந்நூலில் பதிவு செய்திருக்கிறார், மன்னர் மன்னன். ஒரு கவிஞன், ஒரு புரட்சி இயக்கத்தின் ஈட்டிமுனையாக எவ்வாறு விளங்குகிறான் என்பதை இவ்வரலாறு தெளிவு படுத்துகிறது.

1961 - ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 29 - ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சென்னை இராஜாஜி ஹாலில் அனைத் திந்தியத் தமிழ் எழுத்தாளர் பெருமன்றத் துவக்க விழா நடைபெற்றது. பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் சுப்பராயன், மீ. ப. சோமு ஆகியோர் அவ்விழாவில் கலந்து கொண்டனர். பாவேந்தரும் விழாவில் கலந்து கொண்டார். பாவேந்தரை விழாக் குழுவினர் பேச அழைத்தபோது எழுந்து இரண்டு நிமிடம் மட்டும் பேசி விட்டு உட்கார்ந்து கொண்டார். பேச்சு மிகச் சுருக்கமாக இருந்தாலும், கேட்பவர் உள்ளத்தைத் தைக்கும்படி அமைந்திருந்தது.

16