பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தமிழ் எழுத்தாள்ன் முதலில் தமிழை ஒழுங்காகக் கற்க வேண்டும் இன்றையத் தமிழ் எழுத்தாளர் பலருக்குத் தமிழே தெரியாது. எழுத்தாளன் என்பவன் எப்போதும் எவருக்கும் அஞ்சாமல் த ன் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிடும் துணிச்சல் பெற்றவனாக இருக்க வேண்டும் ' என்று குறிப்பிட்டார். சிலர் மேடையில்

பேசுவர் ; ஆனால் செயலில் காட்டமாட்டார்கள். பாவேந்தருக்குச் சொல்வேறு செயல்வேறு என்பதில்லை. அவர் பேனா எதற்காகவும் எப்போதும் அஞ்சியதில்லை: நடுங்கியதில்லை : கொஞ்சங்கூட வளைந்து கொடுத்த தில்லை.

தமிழர்களின் எழுதுகோல் எப்படியிருக்கவேண்டும் என்ப தற்கு அவரே கீழ்க்கண்டவாறு விளக்கம் தருகிறார் : அவ்விளக்கம் கவிஞராகிய இவருக்கும் பொருந்துமன்றோ?

கருத்தாற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்

கண்டதை மேற்கொண்டெழுதிக் கட்டுரையாக்குங்கால்

தெருத்தாற்றும், ஊர்தாற்றும்; தம்முளமே தம்மேற்

சிரிப்பள்ளித் தாற்றும்; நலம் செந்தமிழ்க்கும் என்னாம் ?

§: * 5:

பொதுமக்கள் தலம்தாடிப் புதுக்கருத்தைச் சொல்க: புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால் எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை ? ஏற்றசெயல் செய்வதற்கும் ஏன்அஞ்ச வேண்டும்?

பாவேந்தர் இவ்வாறு எழுதியதோடு நிற்கவில்லை. தாம் வலியுறுத்திய இந்த எழுத்துக் கற்பைத் தம் வாழ்நாளின் இறுதிவரை ஒழுங்காகக் கடைப்பிடித்தார். இக்கொள் கையில் இருந்து தவறவேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்ட

17.