பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது, பாவேந்தர் எப்படி நடந்துகொண்டார் என்ப தை மன்னர் மன்னன் இந்நூலில் பதிவு செ ய் திரு க் கிறார்.

மதுரையிலிருந்து திரு. சி. பா. ஆதித்தனார் ‘தமிழன்' என்ற வார ஏ ட் டி ைன வெளியிட்டார். அவருக்குப் பாவேந்தர் மீது ஈடுபாடு அதிகம். தமிழன்’ முதல் இதழ் பாவேந்தரின் உருவப்படத்தையும் கவிதைகளையும் தாங்கி வந்தது. தமிழ் இராஜ்யத்திற்கு உழைக்கும் வாரப் பத்திரிகை ' என்ற குறிப்புடன் அந்த ஏடு வெளி வந்தது. தமிழர் பறைமுழக்கம் போன்ற உயரிய பாடல்களைப் பாவேந்தர் அதில் எழுதி வந்தார்.

தொடக்க நாளில் 'தமிழன் ஏட்டுத் தொடர்பு நல்ல முறையில்தான் இருந்தது. காலப்போக்கில் அந்த உறவில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஓரிதழின் முகப்பில் திரைப்பட நடிகையின் படம் வெளியிடப்பட்டது. அதே இதழில் பாவேந்த ரி ன் கவிதையொன்று சில பிழைகளோடு வெளியிடப்பட்டது. பாவேந்தர் அந்த இதழைப் பார்த்து வெகுண்டார். தமிழன்” தரம் தாழ்ந்துவிட்ட தற்காக வ ரு ந் தி னார். கண்டதை மேற்கொண்டு எழுதிக் கட்டுரையாக்குங்கால் தெருத்துாற்றும் : ஊர் து ற் று ம் ' என்ற கொள்கையுடையவர் அல்லரோ பாவேந்தர் ? இதழின் போக்கைக் கண்டித்துக் கடிதம் ஒன்று எழுதினார். -

'தமிழன் அலுவலகத்தின் இலக்கிய ஆசிரியர் நாற்காலி இப்போது காலியாக இருக்கின்றதோ ? தமிழன் முகப்புப் படத்தை நடுத்தெருவாக்கிவிட்டீர்களே !' என்று எழுதி விட்டார். தமிழன் அலுவலகம் முகம் சுளி க்க க் தொடங்கியது. தமிழன் இதழில் வெளியாக இருந்த பாவேந்தரின் புதிய படைப்பான தமிழச்சியின் கத்தி

I-8