பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்துப்படி திருப்பி அனுப்பப்பட்டது. 'தமிழன்' உறவு அறுந்தது. அதற்காகப் பாவேந்தர் வருந்தவில்லை. 'கவிஞன் என்ற தமது கெளரவம் காயப்படுத்தப்படும் போதெல்லாம், அவர் அ ஞ் சா ம ல் பிடரி சி விர்த் து எழுந்திருக்கிறார். இதேபோல வேறொரு நிகழ்ச்சி யையும் பாவேந்தர் வரலாற்றில் இருந்து கட்டிக்காட்டு கிறார் மன்னர் மன்னன். -

'சக்தி ஆசிரியர் திரு. வை. கோவிந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவ்விதழுக்குப் பாவேந்தர் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த நேரம், ருசிய நாட்டின் மீது படையெடுத்திருந்த இட்லரின் போர் வெறியைக் கண்டித்து சக்தி இதழுக்குக் குடியானவன்' என்ற தலைப்பில் ஒரு பாடல் அனுப்பியிருந்தார். இந்திய மக்களின் விருப்பத்தை அறியாமல், இந்திய நாட்டை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியிருந்த ஆங்கிலப் பேரரசைக் காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் கண்டித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சூழ்நிலையில் போரை ஆதரித்து எழுதப்பட்ட "குடியானவன்' என்ற பாட்டைக் காங்கிரஸ்.கட்சி இதழான சக்தி வெளியிடத் தயங்கியது . குடியானவன் ’ பாடலின் இறுதி வரிகள்,

இதையவன் கண்ட தில்லை ; ஆயினும்

அக்குடி யானவன் எழுந்தான்

நிற்க வில்லை; நிறைந்தான் போரினிலே : என்று முடிகின்றன. கடைசி வரியிலிருக்கும் நிறைந்தான் .ே பா. ரி னி லே' என்று சொற்களை மாற்றிக் கொடுக் கும்படி சக்தி ஆசிரியர் திரு. வை. கோ வி ந் த ன் கேட்டுக்கொண்டார் . " மாற்றம் செய்ய முடியாது ' என்று சொல்லிக் கவிதையைத் திரும்பப் பெற்றுக் கொண்டார், அந்தக் கொள்கைக் குரிசில்.

I'9