பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைவேற்றப்பட்டது. அதற்காக ஸ்டப்ஸ் சிறிதும் கலங்க வில்லை. தன் கொள்கையிலிருந்தும் பின் வாங்கவில்லை. அவன் வலது கை வெட்டப்பட்டதும், இடது கையால் தன் தலை மீதிருந்த தொப்பியை அசைத்த வண்ணம் அரசியை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும்' என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்தான். இப்படைப்பாளியின் நெஞ்சுரமும் கொள்கைப் பிடிப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பாவேந்தர் பாரதிதாசனின் நெஞ்சுரமும் இப்படிப்பட்டது தான். தமக்கிருக்கும் இந்தத் துணிச்சலையும் போராட்டக் குணத்தையும் பல இடங்களில் அவரே வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இருளினை வறுமை நோயை

இடறுவேன்; என்றன் மீது உருள்கின்ற பகைக்குன் றத்தை

ஒருவனே உதிர்ப்பேன் - என்றும்

& ©. «»

மாயும் உயிரென்றால்

மருளாத காளை நான் - என்றும்

தமது பாடல்களின் இடையில் குறிப்பிடுவது அவரைப் பற்றித்தான்.

உண்ண உணவும் உறங்க உறையுளும் மறுக்கப்பட்டு. குளத்துநீரை அருந்திவிட்டுக் கோயில் திண்ணையில் படுத் துறங்கிக் கூனிச்சம்பட்டுக் கிராமத்தில் வாழ்ந்தபோதும் திருபுவனைத் தேர்தலுக்குப் பின் புதுவை அரசாங்கம் பொய் வழக்குச் சுமத்தி இவரைச் சிறையில் தள்ளிய போதும், காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தமிழறிஞர்கள் இவரை அட்டைக்கிளாஸ் வாத்தியார் என்று அரங்கத்தில் பேசி அவமதித்த போதும், ஆணவம் பிடித்த கல்வித்துறை அதிகாரிகள் இவர் நிம்மதியைக் குலைக்க ஊருக்கு ஊர்

2 I