பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏத்துக்கிட்டு உன்னை அடமானம் வைக்க வேண்டிவரும் ' என்று விளக்கிவிட்டு, தாம் 38 ஆண்டுகள் அடக்குமுறை அரசின்கீழ் ஆசிரியப் பணிபுரிந்த விவரத்தைக் கூறுகிறார். கவிஞர் சொன்னபடி நேரே தம் சொந்தப் ஊருக்குப் போய்ச் சிறு வாணிகம் செய்யப் புகுந்த அந்த இளைஞர், எதிர்காலத்தில் பெருஞ்செல்வராய் - புரவலராய் மாறி .ண்ார். கவிஞன் தன்னை யாரிடமும் காசுக்காக அடமானம் வைக்கக்கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருந் திருக்கிறார் என்பது புலப்படும்.

பாவேந்தரின் தகுதி அறியாத சிலர் இவர் மான உணர் வைக் காயப்படுத்தும் நிகழ்ச்சிகள் சில, இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்டதுண்டு. திராவிட இயக்க ஏடான குடியரசு இதழில் இவரது வளர்ச்சியை விரும்பாத குறும் புக்காரர் சிலரால், இவரைப்பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டன. அதைக் கண்டு வெகுண் டெழுந்தார் பாவேந்தர். குடியரசு ஏடு பெரியாருக்குச் சொந்தமானது. பேரறிஞர் அண்ணா உட்பட பெரியாரை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. பெரியாரின் செல்வாக்கு அத்தகையது. ஆனால் பாவேந்தர் குடியரசு ஏட்டின் முறைகேட்டை விளக்கித் தந்தை பெரியாருக்குக் காரசாரமான கடிதம் ஒன்றை எழுதிப் பதிவு அஞ்சலில் அனுப்பினார். அதற்குப் பெரி ய | ர் பாவேந்தரைச் சமாதானப்படுத்தி, எட்டுப் பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றைத் தம் கைப்பட எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் முதற்கொண்டு. பல துறைகளிலும் உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ளும் கவிஞர்களின் சில செயல் களுக்கு, நம்மால் விளக்கம் கூறமுடியாத சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. சிறந்த தத்துவ மேதைகளாக நடந்து

器、