பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமையாசிரியர் வருகிறார். கரும்பலகையில் நாயின் ஒவியம். பாரதிதாசன் கூறுகிறார். நம்ம ஊரெல்லாம் கு டி ய ர சு நாடுன்னு சொல்லுகிறோம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கையை உலகத் துக்கே வழங்கிய பிரெஞ்சுக் குடியரசில், நம்ம பிள்ளைங்க எடுத்த எடுப்பிலே படிக்கற பாடம் என்ன தெரியுமா? இவர் நமது ராஜா. இங்கிலாந்தின் சக்கரவர்த்தி. ரொம்ப நல்லா இருக்குங்க. இப்படிப்பட்ட பாடத்தைச் சின்னப் பசங்களுக்குக் கத்துக் குடுத்தா குடியரசு நாட்டிலேயும் சக்ரவர்த்தி இருப்பார்னு நெனைச்சிடுவாங்களே, நம்ம தேசம் இங்கிலாந்தென்று பாடம் பண்ணிடுவாங்களே! என்கிறார் தமிழாசிரியர் சுப்புரத்தினம்.

அதுசரி! நாயின் படத்தை எதுக்கு எழுதி வைக்கணும்? ஐயமும் வியப்பும் தலைமையாசிரியரைத் தள்ளாடச் செய்கின்றன. தலைமையாசிரியர் மட்டுமா? நாமும்தான் தள்ளாடுகிறோம். நாயின் படம் யாருக்குக் குறியீடு ? புதுவை அரசாங்கத்துக்கா ? புதுவைக் கல்வித்துறைக்கா ? புரியவில்லை. இப்படிப் புரியாமல் சில சமயங்களில் நடந்து கொள்வதுதான் கவிஞர்களின் பண்பு

அழகில் பார்த்தவுடன் படியும் உணர்ச்சியும், கலையுள்ள மும் கவிஞர்களுக்கே உரிய இயல்பான பண்புகள். ஒரு சிறிய வேலையாக இருந்தாலும், அது கலையம்சத்தோடு, சிறப்பாக முற்றுப் பெற வேண்டும் என்பதில் பாவேந்தர் அதிக அக்கறை காட்டுவது வழக்கம். எதிர்பாராத முத்தம் - காப்பியம் அச்சானபோது, அதற்கு முகப்பு ஒவியம் யாரைப் போடச் சொல்வது என்ற கேள்வி எழுந்தது. சென்னை ஒவியக் கல்லூரியின் முதல்வரா யிருந்த, புகழ்பெற்ற ஒ வி ய ர் ராய் செளத்ரியிடம் அப்பணியை ஒப்படைப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

26