பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணியை ஒப்படைத்துவிட்டோம். அவர் எப்படியோ எழுதி முடிக்கட்டும் என்று பாவேந்தர் நினைக்கவில்லை. தாமே நேரில் சென்று ராய் செளத்ரியைப் பார்த்து, காப்பியக் கதையையும், பாத்திரப் பண்புகளையும் விளக்கி யிருக்கிறார். தமிழ்நாட்டு வணிகர் குடும்பத்தில் ஆடவரும் பெண்டிரும் ஆடை எவ்வாறு அணிவார்கள் என்பதை அவருக்கு அருகிலிருந்து விளக்கியதோடு, மாதிரிக்கு ஆடவர் அணியும் மேற்சட்டை ஒன்றை மன்னர் மன்னன் மூலம் ராய் செளத்ரிக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறார்.

கவிதையில் வெளிப்படுத்தும் கலைநுட்பம், நாட்டில் நிலவும் உண்மையான பழக்க வழக்கம், பண்பாடு இவற் றிற்கு ஏற்ப அமைய வேண்டும். படைக்கப்படும் காட்சி கற்பனைக் கண்ணுக்கு இயல்பாகத் தென்பட வேண்டும். அதில் பாரதிதாசன் பேராற்றல் வாய்ந்தவர்' என்று ராய் செளத்ரி பாராட்டியிருக்கிறார்.

என்னுடைய கற்பனையில் உருவான பாத்திரப் படைப்பு களுக்கு, மரபு வழிவந்த பண்பாட்டின்படி ஒவியம் தீட்டிய Гт тий செளத்ரி ஒவியப் புலவர் மட்டுமல்லர்; அவரும் ஒரு காவியப் புலவரே!' என்று பாவேந்தர் பாராட்டியுள்ளார். கலைத்தேனில் தோய்ந்த இரு வண்டுகள், மெய்மறந்த நிலையில் பாடும் பாராட்டுக் கீதங்கள் இவை.

கலையுணர்வில் தம்மை இழந்தவர்கள் பொருள் இழப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பாவேந்தர் வாழ்விலும் இத்தகைய இழப்புகள் அதிகம். தம் வாழ்வின் இறுதி நாட்களில், திரைப்படத் தயாரிப்பில் இறங்கிக் கடன்பட்டு நிம்மதியிழந்து உயிர்விட்டதற்குக் காரணம், கவிஞராகிய பாரதிதாசன் உள்ளத்தில் கொழுந்துவிட்டு அணையாமல் எரிந்து கொண்டிருந்த கலையுணர்வுதான்.

27