பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகப் பணி புரிந்து கொண்டிருந்த இளைஞர் நடராசன் சிவந்த மேனி, நெடிய உருவம், அழகிய கண்கள், கரிய மூக்குடன் கூடிய ஆணழகன். அவனை எதிர்பாராமல் சந்தித்த பாவேந்தர், இவன் நாட்டியமாடினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்யத் தொடங்கிவிட்டார். கற்பனை செய்த தோடு நிற்கவில்லை. நாட்டியப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தார். சேரதாண்டவம் என்ற நாடகத்தை எழுதியதே இவனை உள்ளத்தில் நினைத்துத்தான்.

புதுவை இலக்கிய மன்ற நிதிக்காக நடராசன் - சகுந்தலா ஒரியண்டல் நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. செலவில் பாதித் தொகைகூட வசூல் ஆகவில்லை. நகையை விற்றுப் பாவேந்தர் கடனைத் தீர்த்தார். நடராசன் கவிஞருக்காக அழுதே விட்டார்.

'யார் அழுது என்ன பயன்? என் கழுத்துச் சங்கிலி போனது திரும்பிவிடுமா? என்று என் அன்னை மனங் கலங்கினார். பொன்னகை போனது அன்னைக்கு; புகழ் ஒளி சேர்ந்தது தந்தைக்கு ' என்று மன்னர் மன்னன் இந்நூலில் திருப்திப் பட்டுக்கொள்கிறார்.

கவிஞர்கள் கனவுகளினால் வாழ்பவர்கள்; ஒரு கவிஞன் கனவு காணவில்லையென்றால், அவன் உள்ளத்தளவில் இறந்துவிட்டான் என்பது பொருள். கவிஞன் காணும் கனவுகளே எதிர்காலத்தில் சமுதாயச் சட்டங்களாகவும் அரசியற் சட்டங்களாகவும் உருப்பெறுகின்றன.

இலண்டனில், வட்டமேஜை ம ா நா டு நடந்தபோது இசுலாமிய நண்பர்கள் கூட்டமொன்றில் கவிஞர் முகமது இக்பால், முதன்முதலாக பாகிஸ்தான் ' தனிநாடு கோரிக்கை பற்றிய கருத்தை வெளியிட்டாராம். இதை ஃபிரான்க் மொரேய்ஸ், ஜின்னாவிடம் கூறினாராம்.

2 8