பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதைக் கேட்ட ஜின்னா ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த்து விட்டு, 'நண்பனே! இக்பால் அரசியல்வாதிஅல்ல என்பது உனக்குத் தெரியாதா? அவர் ஒரு கவிஞர். கவிஞர்கள் கனவு காண்பார்கள்' என்று குறிப்பிட்டாராம். ஆனால் இக்பால் கண்ட கனவு ஜின்னாவின் காலத்திலேயே நனவாகி விட்டது.

'உலகத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெரிய ஆபத்து அணுகுண்டு அன்று; வேகமாக வளர்ந்து வரும் மக்கட் பெருக்கம்தான்' என்பதை ஆல்டஸ் ஹக்ஸ்லி போன்ற மேலைநாட்டு மேதைகள் உலக அரங்கில் முழக்கம் செய் தனர். இந்திய நாட்டு அரசியல்வாதிகள் யாரும் குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி நினைக்காத நேரத்தில்

காதலுக்கோர் வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்; இதிலென்ன குற்றம் என்று முழக்கமிட்டவர் பாவேந்தர். இந்திய அரசாங் கத்தின் இருபது அம்சத்திட்டத்தில் அது முக்கியத் திட்ட மாகிவிடவில்லையா? பாவேந்தர் கண்ட கனவுகள்தாம், தமிழக அரசின் தலைவிதியையே மாற்றி அமைத்துள்ளன. கடந்த கால் நூற்றாண்டுகளாகத் தமிழக அரசியலுக்கு ஊக்கச் சக்தியாக விளங்குவதும் பாவேந்தர் கனவுகளே. பாவேந்தருடைய பாட்டு வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத அரசியல் மேடை, தமிழ்நாட்டில் இல்லை. அவர் தமிழரின் குருதியோட்டத்தில் கலந்துவிட்டார்.

நெப்போலியன் ஜெர்மனியைக் கைப்பற்றியதும் முதல் வேலையாக, கவிஞர் கெதெ இருக்குமிடத்தைத் தானே தேடிச் சென்று அவரிடம் பேசி மகிழ்ந்தான். பாவேந்தர் பாரதிதாசனைப் பெருந்தலைவர் காமராஜர் முதல் ஜீவானந்தம், ராமமூர்த்தி உட்பட பல கட்சித் தலைவர் களும் நேரில் வந்து கண்டு பேசி மகிழ்ச்சியடைந்திருக் கின்றனர்.

29