பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :

கேள்வி :

பதில்

நீங்கள் பிறந்த ஊர் எது?

தஞ்சை மாவட்டத் திருநாகேசுரம்; ஞானியார் அடிகள் பிறந்த ஊர்.

கவிதை விருப்பம் இளமையில் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

ஒப்பாரி, வள்ளுவன் கூறும் ஜோதிடப் பாடல், குறி சொல்லும் குறத்திப் பாடல், ஏணி ஏற்றம் ஆகியவற்றைச் சிறுவயதில் விரும்பிக் கேட்கும் பழக்கம் உண்டு. பள்ளியில் படிக்கும்போதே

பாட்டெழுதுவேன். நான் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலை, எம் பள்ளி மாணவர்கள் பாடுவார்கள். அப்போது எனக்கு வயது பதினான்கு.

நீங்கள் இளமையில் யாரிடமாவது பாடம் கேட்டதுண்டா?

ஒரத்தநாடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, நந்திக் கலம்பக உரையாசிரியர் அருணாசல தேசிகரிடம் கொஞ்சநாள் இலக்கண இலக்கியப் பாடம் கேட்டதுண்டு. பேராசிரியர் இலக்குவனாரும் அப்போது அப்பள்ளியில் மாணவராக இருந்தார்; பத்தாம் வகுப்பரை படித்தேன்.

இளமையில் உங்களைக் கவர்ந்த கவிஞர்கள்

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சுத்தானந்த பாரதியின் பாடல்கள் அடிக்கடி பத்திரிகைகளில் வரும். முதலில்

32