பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :

கேள்வி :

பதில்

நெ ரு ங் கி ப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பாவேந்தருடைய கவிதை நூல்களைப் படி யெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த காரணத் தால், அவருடைய உத்திகளைப் புரி ந் து கொண்டேன். எனது கவிதைத் துறைக்குப் பாவேந்தரே வழிகாட்டி. ஆனால் நான் அவரைப் பின்பற்றி எழுதவில்லை. ஒரு பெருங் கவிஞரைப் பின்பற்றி எழுதினால், நம்முடைய சொந்த வளர்ச்சி பத்தாண்டுகள் பின் தங்கி விடும். -

யாரையும் பின்பற்றாமல் புதிய முறையில் எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கக் காரணம் என்ன?

நான் ஒரு நாத்திகன். கவிதை ஒரு வரப் பிரசாதம் என்பதை நான் மறுக்கிறேன். கடுமை யாக உழைத்துப் பழைய புலவர்களை வென்று காட்ட வேண்டும் என்ற ஆர்வம் என்னை இளமையில் உந்தித் தள்ளியது. எ ன க் கு இத்தகைய நம்பிக்கையும், மன உறுதியும் ஏற்பட்டதற்குக் காரணம் பெரியாரின் கொள் கையில் எனக்கிருந்த ஈடுபாடுதான்.

கவிதை ஆற்றல் பற்றி உங்கள் கருத்தென்ன?

பிறவியிலேயே ஒருவன் கவிஞனாகப் பிறக் கிறான் என்பதெல்லாம் பித்தலாட்டம். ஒரு பொருளையோ, அல்லது நிகழ்ச்சியையோ பார்த்து உணர்ச்சிவசப்பட்டுப் பாடுதல் என்ற பழக்கமும் எனக்குக் கிடையாது. எந்தப் பொருளைப் பற்றியும் உட்கார்ந்து சிந்தித்துத் தான் எழுதுவேன். பிள்ளை பெறவேண்டும்

34