பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :

கேள்வி :

கேள்வி :

நீங்கள் விரும்பிப் படித்த நூல்கள் யாவை? ஏன்?

கல்லாடம், திருக்குறள், நாலடியார், தல புராணங்கள், 17 - 18 ஆம் நூற்றாண்டுப் புலவர்கள் எழுதிய சிறு பிரபந்தங்கள் ஆகிய வற்றை விரும்பிப் படிப்பதுண்டு. கொள்கை அளவில் புராண நூல்களை நான் வெறுத் தாலும், அவற்றை எழுதிய கவிஞர்களின் ஆற்றலை மிகவும் மதிக்கிறேன். பேராற்றல் மிக்க கவிஞர் பலர் ஊ ர் பே ர் தெரியாமல் அழிந்து போனார்கள்; அவர்களுக்காக வருத்தப் படுகிறேன். நான் படிக்கும்போது பாடலை அதிகமாகச் சுவைப்பதில்லை. அதில் பயன் படுத்தப்பட்டுள்ள கவிதை உத்திகளைத்தான் அதிகம் சுவைப்பேன்.

கவிதை எப்படி இருக்க வேண்டும்?

முத்தத்தைப் போல் சுவையாகவும் சுருக்கமாக வும் இருக்க வேண்டும். சிறிய கவிதைகள் எழுதி வெற்றிபெறப் பெரிய ஆற்றல் வேண்டும். சொற் சுருக்கம் எனக்குப் பிடிக்கும். தாழம்பூவை மடித்துத் தலையில் செருகவேண்டும்; அதுபோல சொற்களை மடித்துக் கவிதையில் செருக வேண்டும். சங்க இலக்கியத்தின் வெற்றியே சொற் சுருக்கத்தில்தான்! நல்ல கவிதைகளை எழுதுவதற்கு மிகவும் கடினமான உழைப்புத் தேவை. கவிதை எழுதுவதைவிட ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.

நீங்கள் உங்கள் பாடல் வரிகளை பதிப்புக்குப் பதிப்பு மாற்றி விடுகிறீர்களே! ஏன்?

3 6