பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :

பதில்

கேள்வி :

அது என் வளர்ச்சியின் அடையாளம். ஒரு பெண் பருவ முதிர்ச்சி அடைந்த பி ற கு தாவணிக்கு மாறுவது போல.

கதைக் கவிதைகளை நீங்கள் விரும்பி எழுதக் காரணம் என்ன?

சொல்ல விரும்பும் கருத்தைக் கதைக் கவிதை யாகச் சொன்னால்தான் படிப்பவர் உள்ளத்தில் நிலைக்கும்படி சொல்ல முடியும். எனவே என் சொல்விளக்கப் பாடல்களைக் கதைக் கவிதை யில் தொடங்கிக் கருத்து விளக்கத்தோடு முடிக்கிறேன்.

'செக்ஸ்’ உங்கள் பாட்டில் அதிகம். ஏன்?

அது நிலைபேறு பெற்ற சப்ஜெக்ட்'. சிறந்த உத்தி. மேலும் பாமரன் முதல் படித்தவன் வரை எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய பொருள் (theme). இந்து, புராண இதிகாசங்களை மட்டும் புரிந்து கொள்வான்; கிறித்தவன், ைப பி ைள மட்டும் புரிந்து கொள்வான்; முகம்மதியன், குரானை மட்டும் புரிந்து கொள் வான். ஆண்டவனைப் புரிந்து கொள்வதிலும் இப்படிப் பாகுபாடு உண்டு. ஆனால் இவர்கள் எல்லாருமே காதலைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லையா? எனவே காதலுக்கு ஆண்டவனை விடப் பரப்பு அதிகம். மேலும் நம் நாட்டுப் பக்தர்களுக்கு, ஆண்டவனையே ப டு க் ைக அறைக்குள் அனுப்பி வைத்து, நாயக நாயகி பாவத்தில் பாடினால்தான் புரியும். காதல் ஆண்டவனுக்கும் அறிமுகமாக அமைகிறது.

37