பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்துக் கொண்டிருந்த இளைய தலைமுறையினர் சங்க கால உடோபியா பற்றிய கனவுகளில் வளர்ந்தனர். சங்க இலக்கியங்கள் புரியாவிட்டாலும் அதில் என்னதான் மாயமந்திரம் புதைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள் ளும் குடைச்சல் அவர்களுக்கு மிகுதியாக இருந்தது. அந்த நேரத்தில்தான் டாக்டர் மு. வ. போன்ற வியாக்கியான கர்த்தாக்கள்' தோன்றிச் சங்க இலக்கியச் சாரத்தைக் காட்சி காட்சியாக வரிசை வரிசையாகப் புற்றிசல் போல வெளியிட்டனர், தமிழ்ப் ப எண் பா ட்டு மறுமலர்ச்சி, திராவிட இயக்க எழுச்சியால் சூடு பிடித்துக் கொண்டது. பாரதிதாசன் அந்த இயக்கத்தின் ஈட்டி முனையானார். அவர் படைப்புக்கள் புதிய திருப்பத்தையும், தீவிரத்தையும் புதிய பரிமாணத்தையும் பெற்றன. பாரதி-பாரதிதாசன் விரிசல் பெரிதாகியது. அரசியல் காரணங்களும் சேர்ந்து கொண்டதால், இருவருடைய சங்க நாதங்களும் வேறு பட்டு வெவ்வேறு திசையில் ஒலிக்கத் தொடங்கின. பாரதிதாசன் என்ற புதிய சகாப்தம் தோன்றியது. புதிய தமது தசாங்கத்தோடு, தமது ஆளுகைக்குட்பட்ட கவிதை ராச்சியத்தில் பவனி வரத் தொடங்கிவிட்டார் பாரதிதாசன், அவருக்கென்று தனிப் பரிவாரம் சேர்ந்து விட்டது. அவருடைய கொடி உயரப் பறக்கத் தொடங்கி விட்டது. பாரதிதாசன், கடந்த நாற்பதாம் ஐம்பதாம் ஆண்டுக் காலக் கட்டத்தில் இடிமுழக்கமாக, புயலாக, கொடிமின்னலாகக் கவிதை வானில் ஆற்றலோடு வெளிப் பட்டார். அவர் பாட்டு வரிகள் மோசஸின் பத்துக் கட்டளைகளாக திராவிட இயக்க இளைஞர்களின் நெஞ்சில் இறங்கின. பாரதிதாசனுக்கு ஒரு பரம்பரை தோன்றத் தொடங்கியது. ஓர் இளங்கவிஞர் வரிசை அணிவகுத்து நின்றது. அந்த அணிவகுப்பின் கடைசி வரிசையில் உயரமாக, சற்று வித்தியாசமான தோற்றத் தில் நின்றவர் சுரதா.

4 Q