பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கனி முற்றிக் கனிந்த பிறகு அழுகத் தொடங்குவது போல், ஒரு காலகட்டத்தில் சிறப்பாக விளங்கும் ஒரு கவிதை இயக்கம் தனது உயர்ந்த நிலையை எட்டிய பிறகு சீர் குன்றத் தொடங்குகிறது. எலிசபெத் ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த மறுமலர்ச்சி - சீர்திருத்தக் கவிதை இயக்கங்கள் வலிகுன்றத் தொடங்கின. ப தி னாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட புதிய சிந்தனைப் போக்குகளும், வானவியல் ஆராய்ச்சியும், அறிவியல் அடிப்படையில் கோபர்நிகஸ், கெப்ளர், கலீலியோ போன்ற மேதைகள் வெளியிட்ட கருத்துக்களும் கவிஞர்களின் சிந்தனையில் பெரிய மாற்றங்களைத் தோற்றுவித்தன. கவிதைகளுக்குப் புதிய பரிமாணங்களும், உள்ளீடுகளும் கிடைத்தன. கவிதை, தான் சென்று கொண்டிருந்த பாதையை மாற்றிக் கொண்டது.

17-ஆம் நூற்றாண்டில் ஜான்டன், ஜியார்ஜ் ஹெர்பர்ட், ஹென்றி வாகன், ரிச்சர்ட் க்ராஷா, தாமஸ் கேரூ, ஆண்ட்ரூ மார்வல், அப்ரகாம் கெளலி, ராபர்ட் ஹெர்ரிக் என்ற கவிஞர்கள் மெய் விளக்கவியலைக் கவிதையில் தோற்றுவித்து, ஆங்கிலக் கவிதையின் போக்கையே மாற்றி னர். ஸ்பானியக் கவிஞரான கங்கோராவின் படைப்புக் களும், இத்தாலியக் கவிஞரான மாரினியின் படைப்புக் களும் இதே அடிப்படையில் தோன்றியவைதான்.

தமக்கு முற்பட்ட கவிதை மரபில் இருந்த தேக்கத்தைப் போக்கி, புதிய சிந்தனைகளை புதிய பாணியில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வமே மெய்விளக்கக் கவிதைகளின் தோற்றத்துக்கு அடிப்படைக் காரணம். தாம் கூறுவதை அறிவு நுட்பத்தோடு, உணர்ச்சி பொங்க, நாடகப் பாங்கில் கூற இவர்கள் விரும்பினர்.

43