பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பொங்கும் உணர்ச்சியில் கவிதை தோன்றுகிறது' என்ற கொள்கையில், இவர்களுக்கு உடன்பாடு இல்லை. புலமையோடு கூடிய ஆழ்ந்த சிந்தனையிலிருந்து வெளிப்படுவதே கவிதை என்பதில் இவர்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். *உள்ளமும் ஆன்மாவும் கலந்து, உணர்ச்சிவசப்பட்டுக் கிளம்பும் சிந்தனையே கவிதையென்று இவர்கள் கருதினர்.

ஆங்கில மேதையான சாமுவேல் ஜான்சன் இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:

பதினேழாம். நூற்றாண்டில் தோன்றிய மெய்விளக்கக்கவிஞர்கள் நல்ல படிப்பாளிகள்; தாம் கற்றதையெல்லாம் கவிதையில் கொட் டி க்கு விக்க இவர்கள் விரும்பினர். எனவே, இவர்கள் படைப்பு கவிதை யாக இல்லாமல் வெறும் செய்யுளாக அமைந்தது. இவர்களுடைய சிந்தனை யில் தோன்றிய கருத்துக்கள் புது ைம யாக இருந்தன: ஆனால் இயல்பாக இல்லை. மேலும் அவை பொருத்தமில்லாமலும், தெளிவற்றும் இருந்தன. இவர்கள் கையாண்ட படிமங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி அமைந்திருந்தன. கதம்பமான கருத்துக்களைக் கவி ைத ஏரில் வலியப் பூட்டினர். உவமைகளுக்காகவும், மேற்கோள்களுக் காகவும், கருத்து வெளிப்பாட்டுக்காகவும், இயற்கையழ. கையும், கலையுணர்ச்சியையும் சிதைத்தனர்'

மெய்விளக்கக் கவிஞர்களைப்பற்றி ஜான்சன் மேலே குறிப்பிட்டுள்ள க ரு த் துக் கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. அவற்றுள் ஓரளவு உண்மை இருக்கலாம். இக்குறைபாடுகள் எல்லாக் கவிஞர்களிடமும் சில இடங்களில் ஏ ற் படுவது ண் டு. புதுமைக்கவிஞரான டி. எஸ். எலியட், மெய்விளக்கப்பாடல்கள், சிந்தனையின் நேரடி

  • It was in fact, a wedding-bed of the mind and soul,

of thought and emotion. – R. L. VAR SHENEY.

44