பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்ம்ை. இவர்கள் சொல்ல வந்த கருத்தைவிட, சொல்லு கின்ற முறைக்கு அதிக மதிப்பளித்தனர்.

புதுமை விருப்பத்துக்காக இவர்கள் பழைய மரபுகளை மீறத் தயங்கவில்லை; தெளிவற்ற படிமங்களையும், நம்ப முடியாத கற்பனைகளையும் புதுமை கருதிக் கையாண் டனர். சொல்லும் கருத்துக்களை விரசமாகவும், கொச்சை யாகவும் இவர்கள் சொல்லத் தயங்கியதில்லை. சுதந்தர மாகவும், காரண காரியத்தோடும் சிந்தித்த இவர்கள், பிறரைச் சாடும் அங்கதப் Littl &«sifléi) (Satires) மிகவும் வலிமையான கடுமையான சொற்களைக் கையாளச் சிறிதும் தயங்கியதில்லை.

இந்த மெய் விளக்கச் சட்டிையைச் சுரதாவுக்கு மாட்டுவது எனது நோக்கமன்று. புதுமை காரணமாகச் சுரதாவின் பாட்டில், மாணவப் பருவத்திலிருந்தே எனக்கு ஒரு பிடிப்பு இருந்தது. புதிது புதிதாக அவர் படைத்த உவமைகளும் புதிய அவர் கவிதைப் பாணியும் என்னை வியப்பில் ஆழ்த்தின. அவர் கவிதை உத்திகளைப் பின்பற்ற முயற்சி செய்தபோது மிகவும் உழைக்க வேண்டியிருந்தது; அதிகம் படிக்க வேண்டியிருந்தது; ஆழமாகச் சிந்திக்க வேண்டி யிருந்தது.

ஆங்கில இலக்கியக் கவிதைகள் பால் ஆர்வம் ஏற்பட்டு நான் அவற்றை படித்துக் கொண்டிருந்த காலத்தில், கவிஞர் அப்துல் ரகுமான் ஒருநாள் பேச்சுவாக்கில் இந்த மெய்விளக்கக் கவிஞர்களைப் பற்றி வியந்து பாராட்டிக் கூறினார். ரிச்சர்ட் க்ராஷா என்ற மெய்விளக்கக் கவிஞர் மேரி மக்தலேண்ாவைப் பற்றி எழுதியுள்ள The Weeper' என்ற கவிதையிலிருந்து சில வியக்கத்தக்க வரிகளை எடுத்துச் ச்ொன்னார். உடனே என் கவனம் ஆங்கில மெய் விளக்க்க் கவிஞர்களின் பக்கம் திரும்பியது. அவற்றைப்

囊6