பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று பாரதிதாசன் விருத்தப் பாவிற்குச் சுரதா சூட்டிய புகழாரம் மிகவும் பொருத்தமானதே. பாரதிதாசன் எண்சீர் விருத்தத்தில் வெற்றி பெற்றதும், அவர் காலத்தில் குருத்துவிட்ட இளங்கவிஞர்கள் எல்லாரும் எண்சீர் விருத் தத்தையே பிடித்துக் கொண்டனர். அதுவும் உப்புச் சப்பின்றி எழுதத் தொடங்கினர். படிப்பவர்க்கு அதில் ஒருவகைச் சலிப்பும் ஏற்பட்டது.

பாரதி பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு போன்ற சிறு காப்பியங்களை எழுதினார். பாரதிதாசனும் அவரைப் பின்பற்றி சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், தமிழச்சியின் கத்தி போன்ற சிறு காப்பியங்களை எழுதிக் குவித்தார். அவரைப் பின்பற்றி எழுதிய கவிஞர்களுக்கும் இக்காப்பிய வெறி பற்றிக் கொண்டது. தனித் தன்மையோடு புதுமை யான சிறு காப்பியங்களைப் படைக்க முயற்சி செய்யாமல் பாரதி, பாரதிதாசனின் காப்பியங்களை நகல் எடுக்கத் தொடங்கினர். அவற்றைப் படிக்கும் போது பாரதி பாரதிதாசன் படைப்புக்களே நினைவுக்கு வந்தன. தலைப்பு மாற்றம் தவிர, உள்ளடக்கமும் உணர்ச்சிகளும் ஒன்றாகவே இருந்தன. சில இளங்கவிஞர்கள் பாரதி பாரதிதாசன் பாத்திரப் படைப்புக்களை அப்படியே எடுத்துத் தங்கள் காப்பியத்தில் பெயர் மாற்றிச் செருகிக் கொண்டனர்

பெண்ணுரிமை, விதவை மனம், மடமை ஒழிப்பு ஆகிய கருத்துக்களை மையமாக வைத்துக் காலத்தின் தேவைக் கேற்பச் சீர்திருத்த நோக்கோடு, கதைக் கவிதை (Story Poem) களைத் தமிழில் முதன்முதலில் படைத்தவர் பாரதி தாசன். அவரைப் பின்பற்றி இளங்கவிஞர்கள் பலர் அதே கருத்துக்களை மையமாக வைத்து நிறையக் கதைக்

48