பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் எழுதத் தொடங்கினர். ஆனால் அவரை விட்டு விலகிச் சென்று கதைக் கவிதைத் துறையில் புதிய சாதனை களை யாரும் செய்யவில்லை.

பாரதிதாசன் இயற்கையைப் பற்றி எழுதிய ‘அழகின் சிரிப்பு ஒரு வெற்றிப்படைப்பு. இளங்கவிஞர்கள் அதை யும் விட்டு வைக்கவில்லை. அதன் மறுபதிப்பாகப் பல நூல்கள் தோன்றத் தொடங்கின. அவைகள் அழகின் சிரிப்பின் எதிரொலிகளாகவே இருந்தன.

பாரதிதாசன் குடும்பவிளக்கு மட்டும் அதற்கு விதிவிலக்கு. அதை யாரும் நெருங்கமுடியவில்லை. பிறர் பாடுவதற்கு அத்துறையில் பாரதிதாசன் எதுவும் மிச்சம் வைக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட காரணங்களால் பாரதி, பாரதிதாசன் கவிதை இயக்கம் அதிகமாகப் பழுத்து, கனிந்து, தோல் சுருங்கி அழுகும் நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சுரதா தமது புதிய கவிதைப் பாணியைத் தொடங்கினார்.

சுரதாவும் தமது கவிதைக்கு எண்சீர் விருத்தத்தைத்தான் கருவியாகப் பயன்படுத்தினார். ஆனால் அவருடைய எண்சீர் விருத்தம் பாரதிதாசனுடைய எண்சீர் விருத்தத் தினின்றும் அடிப்படையில் மாறுபட்டிருந்தது. பாரதிதாச னின் எண்சீர் விருத்தம் ஒசையினிமையோடு கூடிய கருத் துத் தெளிவினை அடிப்படையாகக் கொண்டது. சுரதா வின் எண்சீர் விருத்தம் உவமை உருவக அணிகளோடு கூடிய பொருட்செறிவை அடிப்படையாகக் கொண்டது.

1. பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்

புதுமணத்தில் தோய்ந்து பூந் தாது வாரி

நதி தழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு

நன் முத்துக் கடலலையின் உச்சி தோறும்

49.