பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதிராடி மூங்கிலிலே பண்ணெ ழுப்பித்

தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து முதிர் தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்

அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன் சிந்தையுடல் அணு ஒவ்வொன் றும்சி லிர்க்கச்

செல்வம்ஒன்று வரும்; அதன்பேர் தென்றற் காற்று.

- பாரதிதாசன்

2. பட்டாடை கட்டிக்கொண் டிருக்கும் வெள்ளைப்

பால்நிலவோ! பளிச்சென்று மின்னும் மீனோ!

கட்டிலுக்கே விட்டுவைத்த சிலையோ! இல்லை

கண்ணாடி மண்டிலமோ! கரும்போ! பூவின்

பட்டியலோ! பொன்அந்தி வெயிலோ! கோவைப்

பழக்கொத்தின் அறிமுகமோ! படமோ! நீல

வட்டாரம் விட்டுவந்த வான வில்லோ!

வாய்பேசும் தாமரையோ! காவிக்கல்லோ!

፵፰ 5:

3. கண்ணேபோற் சிறந்தவளைச் சித்துரர் முத்தைக்

கண்ணாடி தனிற்கண்டு காமங் கொண்டு

புண்ணானான்; புதுக்காம ராச னானான்.

பூவையிவள் தேவையிவள்; இப்பூ வுக்கோர்

வண்டாகி விடவேண்டும்; இன்றேல் என்றன்

வாழ்நாளை விடவேண்டும்; இவள்கை பட்டால்

மண்மேடும் பொன்மேடாய் மாறும்; வான

மழைத்துளியும் வலம்புரிமுத் தாக மாறும்.

- சுரதா

1. தென்றல் 2. அமுதும் தேனும் 3. சித்துார்ச் சாம்பல்

5 0.