பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் பாடலில் அடுக்கடுக்காகத் தோன்றும் உவமை உருவகங்களும், கருத்துக்களின் சுமையும் நம்மைக் கவர்ச் சிக்கின்றன. பாரதிதாசனுடைய விருத்தத்தைப் படித்து விட்டுச் சுரதாவின் விருத்தத்தைப் படிக்கும் போது அழகான குடும்பப் பெண்ணைப் பார்த்துவிட்டு அலங்காரத் தோடு வரும் சினிமா நட்சத்திரத்தைப் பார்ப்பது போன்ற உணர்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. இந்த ரச வாதமே சுரதாவின் விருத்த வெற்றி.

தம்முடைய விருத்தம் எப்படிச் சுவையாகப் பிறப்பெடுக் கிறது என்பதைத் தாய்மையுணர்ச்சியோடு சுரதா வெளிப் படுத்துகிறார் :

1. முதலடியைத் தேனாக்கி அடுத்த டுத்து

முளைக்கின்ற தொடரடியை அமுத மாக்கி விதவிதமாய்ச் சந்தநய நட்புண் டாக்கி

வியப்புமிகு உவமைகளால் புதுமை தேக்கிப் பதமுடைய பாவினமாம் விருத்த மாக்கி

கதைக் கவிதைகள் எழுதுவதில் சுரதாவுக்கு விருப்பம் அதிகம். சொல்லும் எந்தக் கருத்தையும் கதையாகச் சொன்னால் படிப்பவர் உள்ளத்தில் பதியும் என்பது அவர் கொள்கை. ஆனால் கதைக் கவிதை எழுதுவதில் பாரதி தாசனை முழுமையாகப் பின்பற்றவில்லை. இதற்கும் இவர் தனிப்பாணி அமைத்துக் கொண்டார். பாரதி தாசனைப் போல் சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொரு ளாகக் கொள்ளாமல், சிறந்த காதற் கதைகளையும், வரலாற்று நிகழ்ச்சிகளையும் தேர்ந்தெடுத்துக் கதைக் கவிதைகளைச் சுரதா எழுதினார். அவ்வாறு அவற்றைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் உண்டு. தம்முடைய பல திறப்பட்ட திறமைகளையும் முழுமையாக வெளிப்படுத்த விசாலமான இடத்தை விரும்பினார் சுரதா, தம் கற்பனைப்

1. சமணன் சாதித்தான்

5直