பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசுவைக் கட்டிப் போட்டுத் தீனி வைக்கும் பழக்கம் அவருக்குக் கிடையாது மேய்ச்சல் தரையில் அவிழ்த்து விட்டு விடுவார் அதுவாக மேய்ந்து ஒய்ந்து படுக்கவேண்டும். ஆனால் பாரதிதாசன் தன் கற்பனைப் பசுவை முளை அடித்துக் கட்டிப் போட்டுத் தீனி போடுவார் ; சில நேரங்களில் கயிற்றைத் தளர்த்தி விடுவார் ; ஆனால் பசுவை அவிழ்த்து விட்டுக் கண்டபடி மேய அனுமதிக்க

iD frt-t-. H. ff.

பாரசீகப் பஞ்ச காவியங்களில் ஒன்றான ஷிரீன்-ஃபர்காத் காதலை நயமான கதைக் கவிதையாக்கியுள்ளார் சுரதா. அமுதும் தேனும், விதவையும் வேதாந்தியும், முத்தமிட்ட ஞானி, கண்ணிர்க் கதை என்ற பாடல்கள், சுரதாவின் கதைக் கவிதை வெற்றிக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள். மெய்விளக்கக் கவிஞர்கள் யாரும் காப்பியத் துறையின் பக்கம் அதிகமாக நெருங்குவதில்லை. அவர் படைத்துள்ள பட்டத்தரசி, வன்னிய வீரன் என்ற சிறு காப்பியங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அவற்றுள் காப்பியப் பண்புகள் மிக அருகிக் காணப்படுகின்றன,

தமக்கு முன்பும், சம காலத்திலும் வாழ்ந்த கவிஞர்களிடம் இருந்து, தம்மை வேறுபடுத்திக் காட்ட வேண்டுமென்பதில் சுரதா முனைப்பாக இருந்தார். எனவே மற்ற கவிஞர்கள் செய்யாத, புதிய கவிதை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே அவர் விருப்பம். விருப்பத்தின் வெளிப்பாடுதான் கவிதைக் கடிதங்கள். வாழைப் பூ வேதாந்தமும், நெப்போலியன் கடிதமும் இத்துறையில் சுரதா பெற்ற மிகச் சிறந்த வெற்றிகள். இக்கவிதைகள் முன்னணியில்’ வெளிவந்தபோது, கவிதை விரும்பிகளிடையே பரபரப்பை உண்டாக்கின. இந்தப் பாடல்களுக்காகவே முன்னணிப் பத்திரிகையை எல்லாரும் விரும்பி வாங்கிப் படித்தனர்.

52