பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பில் கவிதைகளாக மாற்றினார். திரைப்படச் செய்திகளையும் இவர் விட்டுவைக்கவில்லை. எதையும் கவிதையாக எழுதலாம் என்பதற்குச் சுவரும் சுண்ணாம் பும் சிறந்த எடுத்துக்காட்டு.

பாரதி-பாரதிதாசன் கவிதை இயக்கம் (School of Bharathi and Bharathi Dasan Poetry) Ĝ&#rT třej 856öðrl_ Gp5q &#@ći), சுரதாவின் பாணி திருப்புமுனையாக அமைந்தது. மேலே குறிப்பிட்ட எனது கருத்துக்களிலிருந்து, மற்றவர்களிட மிருந்து மாறுபடும் சுரதாவின் புதிய முயற்சிகள் தெளி வாகும். ஆங்கில நாட்டு மெய்விளக்கக் கவிஞர்களின் தோற்றக் காரணமும், கவிதைச் சிந்தனையும், உத்திகளும் சுரதாவோடு ஒரளவு ஒத்துப்போகின்ற காரணத்தால், சுரதாவையும் அவர்களோடு ஒப்பாய்வு செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த விருப்பத்தின் விளைவே இந்தக் கட்டுரை. இனி மெய்விளக்கக் கவிதை யின் பொதுப் பண்புகள், சுரதாவின் கவிதைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் பார்ப்போம்.

மில்டன் போன்ற காப்பியக் கவிஞர்களும் (Epic Poets), வொர்ட்ஸ் வொர்த், பைரன் போன்ற வியப்பார்வக் கவிஞர்களும் (Romantic Poets), ஷெல்லி போன்ற புரட்சிக் &cosjñ&@5lb (Revolutionary Poets), giã1565& Qasir gy வரையறுத்துக் கொண்ட, அரசியல், சமுதாயக் கொள்கை களைக் கொண்டிருந்தனர். மெய்விளக்கக் கவிஞர்களுக்கு அத்தகைய வரையறுக்கப் பட்ட கொள் ைக எதுவும் கிடையாது. கருத்துப் புரட்சியைவிடக் கவிதை உத்திகளில் இவர்கள் புரட்சி செய்தனர்.

புதுமை விருப்பம்

தாம் கூறும் எதையும், தமக்குமுன் எந்தக் கவிஞர்களும் கூறாத முறையில் புதுமையாகக் கூற வேண்டும் என்பதில் மெய் விளக்கக் கவிஞர்கள் அதிக அக்கறை காட்டினர்.

54