பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் படைப்புகளில் இந்த விருப்பத்தை அதிகம் காணலாம். சுரதாவே அதை "நல்ல தீர்ப்பு' என்ற கவிதையில் ஒரு கள்வன் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

சுனையொன்றில் பூத்தபல மலர்கள் போன்று

சூழ்ந்தபல புலவர்களே! நீங்க ளெல்லாம்

பனியென்பீர்! நிலா வழிக்கும் வியர்வை என்பேன் பாடையென்பீர்; "கால்கழிந்த கட்டில்' என்பேன்

கனியென்பீர்; விதைக்குடும்பம்’ என்பேன்; நீலக்

கடலென்பீர்; மண்மகளின் ஆடை' என்பேன்

தனிநின்று புதுமைபல செய்யும் என்னைத்

தக்கையென்று நினையாதீர்' என்றான் கள்வன்.

பாத்திரப் படைப்பு கள்வனே என்றாலும், ஒலிக்கும் குரல் சுரதாவினுடையது என்பது தெளிவாகத் தெரிகிறது.

காதலனால் சுட்டப்படும் காதலி நாணத்தால் வினாக்குறி போல் குனிவதும், அவனிடம் எச்சில் முத்தம் பெறுவதும் அவன் உடலோடு தன்னுடலைத் தொகுத்துக் கொள்வதும் காதலால் அவனைத் தொடர்வதும் இயல்பான நிகழ்ச் சிகள். ஆனால் இவற்றைக் குறிப்பிடும்போது இதற்குமுன் பாடிய கவிஞர்களினின்றும் முற்றிலும் வேறுபட்டு,

சுட்டாகி வினாவாகி எச்சமாகித்

தொகையாகித் தொடராகி ஆங்கே நின்ற

கட்டாணி முத்தழகி . . . . . . என்று கூறும் போது சுரதாவின் புதுமை விருப்பம் புலனாகிறது.

உடலுறவைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் இல்லை. பிரபந்தக் கவிஞர்கள், மிகவும் நுட்பமாகப் பல கோணங் களில் உடலுறவைக் கவிதைகளில் படம் பிடித்துக் காட்டு கின்றனர். ஆனால் சுரதா வேறு எந்தக் கவிஞரும் சொல்லாத முறையில் -

55