பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருட்டுக்குச் சேலை தந்தாள் இளமைக்கு வேலை தந்தாள்

என்று பாடி வியக்க வைக்கிறார்

வெள்ளை முயலைச் சலவை முயல் என்று குறிப்பிடு வதும், அழகிய வரிசையான சிறிய பற்களைக் குறுந் தொகைப் பற்கள் என்று குறிப்பிடுவதும், தாழைமடலை ஒலை மலர் ' என்று குறிப்பிடுவதும், எண்ணெயை எள் வளின் கண்ணிர்' என்று குறிப்பிடுவதும், துரையை நீரின் நோய்' என்று குறிப்பிடுவதும், காதலியை ஏழாம் வேற்றுமை உருபே: (கண்ணே) என்று அழைப்பதும் நிலவை முத்து நுரை வட்டம் என்பதும் சுரதாவின் புதுமை விருப்பத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள். 'புருவக் காவடி" சுவையான சொல்லாட்சி, *.

சில பாடல்களுக்குச் சுரதா கொடுத்த தலைப்புக்களே புதுமையானவை. வரப்புச் சாமிகள், பரமசிவனும் பாரதி தாசனும், வாழைப்பூ வேதாந்தம் என்பவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இந்தப் புதிய சொல்லாட்சிகளுக்கு அவரே காரணங்களையும் கூறுகிறார்.

தொழுதுண்டு வாழ்வோர் தொழும்பர்கள்; அவரெலாம் கூம்பிய தாமரைச் சோம்பல் சாமிகள்! உழுது பயிரிடும் உழவராம் அவர்களே வகுத்த வயலின் வரப்புச் சாமிகள்!

<> © ©

அல்லிப்பூ முல்லைப்பூ தாமரைப்பூ

அத்தனையும் வானத்தை நோக்கிப் பூக்கும்

மெல்லியநல் வாழைமட்டும் தலைகுனிந்து

வீதிமண்ணைப் பார்த்தபடி பூக்கும்; நாட்டின்

56