பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் கவிதைகளில் அவர் கையாளும் உவமைகளே ஆட்சி புரிகின்றன. உவமைக் கவிஞர்' என்ற பட்டம் அவரோடு இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. சுரதாவுக்குச் சிறு பிரபந்தங்களில் ஈடுபாடு அதிகம். அவற்றின் மூலை முடுக்கில் கூறப்பட்டுள்ள விநோதமான உவமைகளையெல் லாம் சுரதா விழுங்கிச் செரிக்க வைத்திருக்கிறார். உவமை அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்த சுரதா, பிறர் கூறாத புதிய உ வ ைம க ைள க் கூறுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அம்முயற்சியில் வெற்றியும் பெற்றார். சுரதாவின் தேன்.மழையில் குமணன் ' என்ற பாடல். நாடிழந்து காட்டில் தலைமறைவாகத் திரிந்த குமண வள்ளலைத் தேடிப் பெருந்தலைச் சாத்தனார் வருகிறார். குமணனிடம் தமது வறுமையை உருக்கமாகப் பாடுகிறார். இரக்கத்தால் உள்ளம் கசிந்த குமணன்,

எட்டடுக்கு மாளிகையும் நகரும் நாடும்

என்வசத்தில் இருக்கையில் நீ வந்திருந்தால் ஒட்டகத்தின் காலடியை ஒத்த முத்தும்

ஒளிசிறந்த செம்பொன்னும் தந்திருப்பேன்என்று பெருந்தலைச் சாத்தனாரிடம் கூறுகின்றான்.

முத்து, முல்லை, கோவைப்பழம் போன்ற பொருள்கள் கவிதையில் உவமை சொல்வதெற்கென்றே பிறப்பெடுத் தவை. இவைகள் பிற பொருள்களுக்கு உவமைகள் ஆகின் றனவே தவிர, இவைகளுக்கு உவமை கூறுதல் வழக்கில் இல்லை. அப்படிக் கூறினாலும் மிகவும் அரிதாகக் கூறுவர். சிலப்பதிகாரத்தில் மு. த் து க் கு உவமை கூற வந்த இளங்கோவடிகள்,

சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்

6 0