பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று குறிப்பிடுகிறார். இதில் வெண்ணிர்மை கொண்ட முத்திற்கு வெள்ளி என்னும் கோளையும், செந்நீர்மை கொண்ட முத்துக்குச் செவ்வாய்க் கோளையும் உவமை கூறுகின்றார்.

ஆங்கிலக் கவிஞனும் நாடகாசிரியருமான ஆஸ்கார் வைல்டு தாம் எழுதியுள்ள சலோமி என்ற நாடகத்தில் சரிகைப் பையிலிட்ட முத்துக்களைப் பற்றி க் குறிப்பிடும்போது தங்க வலைக்குள் பிடித்து வைத்த ஐம்பது நிலவுகள் ' (They are like fifty moons caught in a golden net) srsörgy குறிப்பிடுகிறான். இங்கே முத்துக்களுக்கு நிலவு உவமை யாகிறது. -

ஒட்டகம் தமிழ்நாட்டு விலங்கு அன்று. ஊருக்குக்குள் வட்டக் காட்சிகள் (Circus) வரும்போது மட்டுமே அவற்றைக் காண முடியும். குதிரையின் காலடிச் சுவடு நீண்ட வட்டமாக (Oval) இருக்கும். ஒட்டகத்தின் காலடிச் சுவடு கவராயத்தால் போட்ட வட்டம் போல் இருக்கும். இதைச் சுரதா கூர்ந்து கவனித்து நினைவில் பதித்து, முத்துக்கு உவமை கூறியிருப்பது வியப்பாக உள்ளது.

'தரைமீன்' என்றொரு பாடல். அதில் ஆட்டன் அத்தி கழாஅர்த் துறையில் நீந்தி விளையாடுகிறான். கரையில் அவன் மனைவி ஆதிமந்தி நின்று, அவன் நீந்தும் அழகைக் கண்ணால் பருகிக் கொண்டிருக்கிறாள். அவன் நீரில் பாய்ந்து மூழ்கி, பின் நீர்மட்டத்திற்கு வருவதை, யானைத் தந்தம் கீழே சரிந்து நுனியில் மேல்நோக்கி வளைந்து வருவதற்கு ஒப்பிடுகிறார் சுரதா. மிகவும் நுட்பமான உவமை !

பந்தெனவே காவிரியில் மிதந்தான் ; நீரில் பாராங்கல் போலமிழ்ந்தான் : சேனை யானைத் தந்தமென மேல்நோக்கி எழுந்தான் அத்தி.

6 I