பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதே பாடலில் ஆதிமந்தி வெட்கத்தால் நாணிக் குனிந்த தை பிழிந்ததொரு புடவையெனக் குனிந்து கொண் டாள் என்று குறிப்பிடும் உவமைநயம் மிக ச் சுவை

யானது.

சிலசமயங்களில் சில உவமைகளுக்காக இவர் நெடுந் தொலைவு பயணம் செய்வதுண்டு. உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை ஒழிக்க ஒருசட்டம் கொண்டுவர வேண்டுமென்று லார்டு பெண்டிங் துரைக்கு ராஜாராம் மோகன்ராய் எழுதிய கடிதத்தைச் சுரதா கவிதையாக்கி யிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கடிதம் சுரதா வின் கைபட்டு, ஒரு வானவில்லாக மாறியிருக்கிறது. சுரதாவின் ஆற்றலுக்கு அப்பாடல் ஒர் உரைகல்.

சமுதாய சீர்திருத்தச் சிந்தனைகளைத் துணிச்சலோடு பரப்பிவந்த ராஜாராம் மோகன்ராய்க்கு எதிர்ப்பும் அதிக மாக இருந்தது. பழமை விரும்பிகள் அவரைக் ஒழித்துக் கட்ட ஒரு கொலையாளியை ஏவினர். அக்கொலையாளி மிகவும் உயரமானவன். அவனுக்கு உவமை சொல்ல அவனைப் போல் உயரமான ஒர் ஆளைத் தேடினார் சுரதா, சீன வரலாறு அவருக்குக் கை கொடுத்தது. சீன ஞானி கன்பூவியஸின் தந்தை ஹல்லியாங்ஹை என்பவர் பத்தடி உயரம் இருந்தார் என்று எங்கோ படித்திருக் கிறார். உடனே அச்செய்தியைத் தமது கவிதை வாகனத் தில் ஏற்றிவிட்டார்.

கன்பூஷ்யஸ் என்பவனோ சீன ஞானி

கற்றறிந்த மாமேதை உலகம் போற்றும்

அன்பாளன்; அவன்தந்தை ஹல்லி யாங்ஹை! அவனுயரம் பத்தடியாம்; சென்ற திங்கள்

முன்கோபத் தோடென்னை வெட்ட வந்த

முட்டாளும் அவனுயரம் இருப்பான்!

62