பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று பாடுகிறார். இவை போன்று நுட்பமாகச் சிந்தித்து எழுதும் தொலைவு உவமைகள் சுரதாவின் பாட்டிலே மலிந்திருக்கின்றன.

கல்விப் பரப்பு

இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த மெய்விளக்கக் கவிஞர்கள் பலதுறைக் கல்வியறிவு பெற்றவர்கள். அவர்கள் தமது காலத்தில் மக்களிடத்தில் வரவேற்புப் பெற்றிருந்த சமய தத்துவம், வானவியல், தர்க்கம், ரசவாதம் (Alchemy) வரலாறு ஆகிய பல கலைகளையும் பயின்று தமது அறிவை விசாலப்படுத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறு தாம் கற்ற பல்கலை அறிவையும் தாம் படைக்கும் கவிதையில் காட்டிக் கொள்ள விரும்பினர். -

சுரதாவும் கண்டது கற்கும் பண்டிதர். அவர் பொழுது போக்கே திருவல்லிக்கேணிக் கடற்கரைச் சாலையில் பழைய நூல்கள் வாங்குவதுதான். மஸ்தான் சாகிபு பாடல் முதல், மார்கரட் தாட்சர் வரை பதார்த்த குணசிந்தா மணி முதல் பல்வி சொல்லும் சகுனப் பலன் வரை எந்த நூல் கிடைத்தாலும் வாங்காமல் விடமாட்டார். வாங்கிப் படித்தும் விடுவார். பலதரப்பட்ட செய்திகளும், வெளியே விட்டால் போதுமென்று அவர் மூளையைக் குடைந்து கொண்டிருக்கும்; அடிக்கடி கவிதை எழுதும் போதெல் லாம் அவைகளுக்கு விடுதலை கிடைக்கும். அவற்றின் அணிவகுப்பைக் கீழே காணலாம் :

வரலாறு

பாலிலே குளித்திட்டாளாம் பனிமங்கை கிளியோத் பாத்ரை

- தேன் மழை பக். 44

63