பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம்

வேற்றுமையை வினைச்சொற்கள் ஏற்ப தில்லை வெறும்பாட்டைத் தமிழ்ச்சங்கம் சேர்ப்ப தில்லை.

தேன் மழை பக். 85

தகுதிமிக்கோர் தருகின்ற பட்டம் பகுதி போல நிலைத்து நிற்கும்

தேன் மழை பக். 170

வினையுவமை பயனுவமை, உடல் அ மைப்பை

விளக்குகின்ற மெய்யுவமை, மின்னும் வண்ணம்

தனைக்குறிக்கும் உருவுவமை எனவ குத்த

தமிழ்த்தொல்காப் பியச்சட்டப் படியிம் மங்கை

வினைபயன்மெய் உருஇவற்றின் கூட்டோ? பற்கள்

விதைக்காத விளைவுக்கோர் எடுத்துக் காட்டோ?

அமுதும் தேனும் பக். 17

சற்று நீ பிரிந்திட் டாலும் தளருவேன்! தனிமை நோயால் குற்றிய லுகர மாவேன்! கொதித்திடும் வெந்நீ ராவேன்!

- அனந்தநாயகி

சாமுத்திரிகா லட்சணம்

சிலேட்டும தேகம் அமைந்தவள் ஆகலின் கூந்தல் நீண்ட கோதையாய் விளங்கினாள்

- தேன் மழை பக். 136

பத்தினியே இதனைக்கேள்! ந்ாகப்பாம்பின்

படம்போன்று விரிந்தமைந்த கழுத்தும் மார்பும் சித்திரம்போல் ஒழுங்கான உடலும், நன்கு

சிவந்திருக்கும் மாந்தளிர்போல் நீண்ட நாக்கும்

65