பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். சுரதாவே சுவையான ஒரு கவிதை. கால் நூற்றாண்டுக் காலம் அவர் சுவையில் ஊறிப்போனவன் நான்.

தமது குருநாதர் சுப்புரத்தினத்தைப் போலவே சுரதாவும், புரிந்து கொள் ள முடியாத விசித்திரப் போக்குகளும், முரண்பாடுகளும் மிக்கவர்; கவிஞன் என்ற முனைப்பான செருக்கும், முரட்டுத்தனமும் உள்ளவர். ஆனால் இப் பண்புகள் யாவும் அவரை அணி செய்கின்றனவே தவிர கேவலப் படுத் த வி ல் ைல. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், அவருடைய உள் ளத் தி ன் நுட்பமான பரிமாணங்களை, இக் குணங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பொதுவாக இருபதாம் நூ ற் றாண் டு க் கவிஞர்கள் ஏதாவது, ஒர் அரசியல் அல்லது சமூக இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது வழக்கம். சுரதாவுக்குத் துவக்க காலத்திலிருந்தே அப்படியோர் ஈ டு பா டு கிடையாது. தம்மையோர் நாத்திகர் என்று கூறிக் கொள்வார். எந்த அரசியல் கட்சியிலும் அவர் உறுப்பினர் அல்லர்; ஆனால் எல்லாக் கட்சியிலும் இருப்பார். கட்சிக் கட்டுப்பாட்டில் அடங்கியிருப்பது அவரால் முடியாத செயல்.

ஒருமுறை காங்கிரஸ் கூட்ட த் தி ல் பேசச் சுரதாவை அழைத்திருந்தனர். பழுத்த தேசியவாதியான திருவாளர் பக்தவத்சலமும் அக்கூட்டத்தில் இருந்தார். சுரதா பேசும் போது, 'நான் காந்தியை விட ஒழுக்கமானவன்' என்று ஒரு வெடிகுண்டை வீசினார். சுரதா காந்தியைவிட ஒழுக்கமானவராகவே இருக்கட்டும். இந்த வெடிகுண்டை காந்தியவாதிகளால் தாங்கிக் கொள்ள முடியுமா? அதன் பிறகு காங்கிரஸ்காரர்கள் இவர் பக்கம் தலைவைத்துப்

73