பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட கொள்கை இருக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு பித்தலாட்டம்!'" என்று சுரதா வெளிப்படையாகவே பேசுவார். தனிப்பட்ட குறிக்கோளோ, லட்சியமோ இல்லாத கவிஞன் உணர்ச்சி வசப்பட முடியாது; தன் படைப்போடு ஒன்றிப் போக முடியாது. சுரதா காதலைப் பற்றிப் பாடும்போது மட்டுமே உணர்ச்சி வசப்படுவார். ஆனால் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் வரையறுக்கப்பட்ட திட்டவட்டமான கொள்கைகளும், கோட்பாடுகளும் இருந்தன. இவ்விருவர்க் கும் அவர்கள் இறப்புக்குப் பின்னும் பலமான அரசியல் பின்னணியும், படைபலமும் பெருகக் காரணம் அவர்கள் ஆர்வத்தோடு கடைப்பிடித்த கொள்கைகளும், கோட்பாடு களும்தான்.

சுரதா உலக இயல்பையும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் கூர்ந்து பார்க்கிறார். அவற்றை இயல்பாகவும், சுவை யாகவும் வெளிப்படுத்துகிறார். ஆனால் எந்த ஒரு குறிக் கோளுக்காகவும் வாதாடுவதில்லை; போர்க்குரல் கொடுப் பதில்லை. அவர் படைப்புக்கள் முழுவதையும் படித் தாலும், இவர் என்ன கொள்கைவாதி? இவர் சமுதாயத் துக்கு உணர்த்தவந்த உயர்கருத்து (message) என்ன?’’ என்பதை இனங்கண்டு கூற முடியாது.

சில கவிஞர்கள் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டிருப் பார்கள். ஜெர்மன் மகாகவி கெதே தமது எண்பதாவது வயதில் தமது பெருங்காப்பியமான பாஸ்து வை எழுதி முடித்தார். பாரதிதாசனும் இறக்கும்போதுகூடத் தமது 73-ஆம் வயதில் கவிதை எழுதிக் கொண்டிருந்தார். சுரதா தமது 40-ஆம் வயதிலேயே கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டார். மற்றவர்கள் வற்புறுத்திப் பாடச் சொன்னால், கவியரங்குகளுக்காகவும், பத்திரிகைகளுக்காகவும் எழுது கிறார். தாமே விரும்பி எழுதுவதில்லை. நன்கு அறிவு

75