பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிர்ச்சி பெற்றிருக்கும் இந்த வயதில், நீங்கள் தமிழுக்கு ஒரு நல்ல காப்பியம் படைத்துத் தந்தால் என்ன?' என்று நண்பர்கள் கேட்டால் நா ன் இதுவரை எழுதியது போதாதா? சங்கப் புலவர்கள் குறைவாகத்தானே எழுதி னார்கள்? பூத்த வேங்கை... என்று தொடங்கும் மூன்று வரிப் பாடலை எழுதிவிட்டுச் சங்க இலக்கியத்தில் நிலை யான இடத்தை ஒரு புலவன் பிடித்து விடவில்லையா? என்று சொல்லிவிட்டுச் சிரிப்பார்.

கவிதை எழுதுவதை எளிய ஒரு பொழுது போக்காகச் சுரதா கருதுவது இல்லை. கவிதை எழுதுவது என்பது அவருக்குக் கடுமையான உழைப்பு. கவிதை என்ற பெயரில், எதையாவது எழுதுவது என்பது அவருக்குப் பிடிக்காது. ஒருவரி எழுதினாலும், அதில் அவருடைய கடின உழைப்புத் தெரியும்.

பேரறிஞர் அண்ணாவுக்குச் சுரதாவின் பாட்டில் ஒரு வெறியே இருந்தது. திராவிட நாடு, காஞ்சி இதழ்களை நடத்தியபோது, ஏதேனும் மலர்கள் வெளியிட்டால், சுரதாவின் பாட்டை விரும்பிக் கேட்டு வாங்கி அழகாக வெளியிடுவார். ஆனால் அண்ணாவுக்கே அவ்வளவு எளிதில் பாடலைச் சுரதா எழுதிக் கொடுக்கமாட்டார். மறைந்த மதியழகனும், தில்லை வில்லாளனும், அரங்கண்ணலும் இவர் வீட்டுக்கு நடையாய் நடந்து கவிதையை வாங்கிச் செல்வது வழக்கம். சில சமயங்களில் சுரதாவைக் காஞ்சிக்குக் கடத்திக் கொண்டு போய், ஓர் அறையில் வைத்துப் பாடலை எழுதி வாங்கிக் கொண்டு அனுப்புவார் அண்ணா. அப்படி எழுதப்பட்டதுதான் ? அவன் மகன் தான் ஆள்கின்றான்' பாடல். அந்தக் காலத்திலேயே சுரதா பாடலுக்கு அண்ணா ரூ. 100/- அன்பளிப்பு வழங்குவார்.

8 இப்பாடல் வென்றவனை வென்றவன் என்று வேறு பெயர் பெற்று

துறைமுகத்தில் இடம் பெற்றுள்ளது.

7 6