பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் கற்பனைகள் சிலவிடங்களில் புரியாமல் நமக்குப் புதிராக இருப்பது போல், சில நேரங்களில் சுரதாவின் பேச்சும் நடவடிக்கையும்கூட நமக்குப் புதிராக இருக்கும். இவை கவிஞர்களுக்கே இயல்பாக அமைந்த பண்புகள். சுரதா மற்றவர்களை விமர்சிப்பதிலும் வ ல் ல வ ர். அவருடைய விமர்சனம் சில சமயங்களில் கேட்பவர் உள்ளத் தைக் காயப்படுத்தினாலும் மிகவும் சுவையாக இருக்கும்.

1968-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு சென்னைத் தீவுத் திடலில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 7-1-1968 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குக் கலைஞர் கருணாநிதி தலைமையில் அண்ணா கவியரங்கம் ' மாநாட்டு மேடையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கவியரங்க இளவரசர் அப்துல் ரகுமான், சரமாரியான சிலேடை வீச்சுக்களால் மாநாட்டு மேடையை அதம்’ செய்து கொண்டிருந்தார், நானும் கவிஞர் சுரதாவும், கவியரங்கத்தைச் சுவைத்தபடி, ஓர் ஒரத்தில் நின்று கொண்டிருந்தோம்.

'என்ன நவாப் சிலேடை மழை பொழிகிறார். சிலேடையை அரிதாகக் கையாள வேண்டும். இல்லாவிட்டால் அது செயற்கையாகத் தெரியும். ஒரு பெண்ணின் முன்தானை தானாக நழுவி விழுவது அழகு; வேண்டுமென்றே நழுவ விடுவது விரசம்' என்றார் சுரதா, உவமையில்லாமல் அவருக்குப் பேச வராது.

1973-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17, 18 தேதிகளில் பூம்புகார் விழா. சிற்பச் சோலையான சிலப்பதிகாரக் கலைக்கூடத்தை அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார்; இரண்டு நாளும் அடர்த்தியான முத்தமிழ் நிகழ்ச்சிகள். தமிழகத்தின்

78