பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிடையே சென்று அமர்ந்தோம். எங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தவர் போலக் கவிஞர் கருணானந்தம் அவசரமாக மே ைட ைய விட்டு இறங்கி வந்தார்; என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பந்தலுக்கு வெளியே ஒடினார்.

முருகு ஒரு பெரிய சிக்கல்! கண் ண தாச ன் இன்று வரமுடியவில்லை என்று சொல்லிவிட்டார். பி. ற் பகல் சுரதா தான் கவியரங்கத் தலைமை ஏ ற் க வே ண் டு ம். சுரதாவைச் சமாளிப்பது உங்கள் பொறுப்பு: என்று அழாக்குறையாகச் சொன்னார் கருணானந்தம்.

எனக்கு மிகவும் தர்ம சங்கடமான நிலை. சுரதா மானப் பிரச்சனையில் எப்போதும் வி ட் டு க் கொடுக்காதவர். நான் சுரதா அருகில் சென்று நின்றேன்.

' என்ன? - சுருக்கென்று சுரதாவின் கேள்வி தைத்தது. என்னோடு வாருங்கள் சொல்கிறேன் என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு கார் அருகில் சென்றேன். 'காரில் ஏறுங்கள்’ என்றேன். அவர் என்னை ஒரு மாதிரி யாகப் பார்த் து வி ட் டு க் காரில் ஏறிக் கொண்டார். 'நேராக வைத்தீஸ்வரன் கோவில் லாட்ஜுக்கு ஒட்டு' என்று காரோட்டியிடம் சொன்னேன். சுரதா புரிந்து கொண்டார். -

கவிஞர் கண்ணதாசனின் சாதிப் பெயரைச் சொல்லி... ... ' வரலியா?" என்று கேட்டார்.

நீங்கள்தான் இன்று கவியரங்கத் தலைவர்! என்று சொன்னேன். ஆத்திரமும் கோபமும் கலந்த சொற்களால் சுரதா என்னை அருச்சிக்கத் தொடங்கி விட்டார். அவரே

ஒயட்டும் என்று பேசாமல் இருந்தேன். கார் விடுதியை அடைந்தது.

30