பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கர்ரில் இருந்து இறங்கி அவசர அவசரமாக ஆற்றுச் சரிவில் ஓடினார். நானும் அவருடன் ஒடினேன். ஆற்று நீரை உள்ளங்கையால் எடுத்து முத்தமிட்டார் சுரதா, "என்ன இது? என்றேன் நான்.

"நீயும் முத்தமிடு! இது எவ்வளவு வரலாற்றுப் புகழ்மிக்க இடம் ஆட்டன் அத்தி இங்குதானே நீரில் குடைந்து விளையாடினான்! ஆதிமந்தி இந்தக் கரையில்தானே கண்ணிர் மாலை தொடுத்தாள்!' என்று சொல்லி மெய் மறந்து நின்றார். ஒ...... உண்மையான ஒரு கவிஞ தரிசனம்?

1974 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சுரதா சேலம் வந்திருந் தார். அப்போது அவருடைய சுரதா இதழ் புத்தக வடிவில் ஆஃப்செட் வண்ண முகப்போடு வெளியாகி யிருந்தது. புதுப்பெண்ணைத் தேனிலவுக்கு அழைத்து வந்ததுபோல், மெருகு குலையாத சுரதா இதழோடு’ வந்திருந்தார் சுரதா.

"சுரதா பொங்கல் மலர்' சிறப்பாக வெளியிடப் போகிறேன். எனக்குச் சேலத்தில் விளம்பரங்கள் திரட்டித் தர வேண்டும் ' என்று என்னிடம் கேட்டார். சேலம் சுரதா அன்பர்களுள் கு றி ப் பி ட த் த க் க வ ரா ன புலவர் அருச்சுனனும், நானும் இரண்டு மூன்று நாட்கள் அலைந்து திரிந்து ரூ. 2000/- அளவுக்கு விளம்பரம் திரட்டித் தந்தோம்.

சேலத்தில் பெரிய செல்வரும், பேருந்து உரிமையாளரும், ஆலை அதிபரும், காங்கிரஸ் தலைவருமான ஒரு பிரமுக ரிடம் விளம்பரம் பெறுவதற்காகச் சுரதாவை அழைத்துச் சென்றோம். அவர் அப்போது வெளியில் சென்றிருந்தார். அங்கே அப்போது இரண்டு பெரும் புலவர்கள் அமர்ந்திருந் தனர். இருவரும் பழுத்த ஆத்திகர்கள்: வைராக்கிய

82