பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவர்கள்: கம்ப ராமாயணத்திலும், காந்தியத்திலும் அளவு கடந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்கள். சுரதா விடம் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள். சுரதாவைக் கண்டவுடன் 'கவிஞரே! வருக!' என்று ஆவலோடு வரவேற்று அன்புடன் அளவளாவினர்.

சுரதாவின் பேச்சு இலக்கியத்தைக் குடைந்து கொண்டு சென்று, இறுதியில் விவேகானந்தரிடம் வந்து நின்றது. பேசிக் கொண்டிருந்த சுரதா திடீரென்று நிவேதிதா விவேகானந்தரின் காதலி' என்று ஒரு குண்டைத் துாக்கிப் போட்டார். உடனே அவ்விடத்தில் ஒரு நிசப்தம்! புலவர் களின் முகம் பேயறைந்தாற் போல் ஆயிற்று.

சற்றுநேர மெளனத்துக்குப் பின், இக்கருத்தை நீங்கள் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா?’ என்று கேட்டார் ஒரு புலவர். மிகவும் புண்பட்ட உணர்வோடு அக்கேள்வி அவர் உள்ளத்திலிருந்து புறப்பட்டு வந்தது. கோபத்தால் அவர் உடல் நடுங்கியது. நானும் புலவர் அருச்சுனனும் செய்வதறியாது திகைத்தோம்.

சுரதா போருக்குத் தயாராகி விட்டார். 'நான் இங்கே விளம்பரம் பெறுவதற்காக வந்தேன் சரி! அது கிடக் கட்டும்! இப்போது இதை (விவேகானந்தர் நிவேதிதா விவகாரத்தை) இரண்டிலொன்று பார்த்து விடுவோம்' என்று தோள் தட்டத் தொடங்கிவிட்டார். கவிஞரைச் சமாதானம் செய்து எப்படியோ வெளியில் அழைத்து வந்துவிட்டோம். அடுத்த நாள் நான் மட்டும் தனியாகப் போய் அச்செல்வரைக் கண்டு, முதல் நாள் நிகழ்ச்சிக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, ஒரு பக்கம் விளம்பரம் வாங்கிக் கொண்டு வந்தேன்.

சுரதாவுக்கு எப்போதும் போலித் தனம் பிடிக்காது. திறமையில்லாத எவரையும் மதிக்கமாட்டார். கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமல் வேண்டியவர்-நீண்ட நாள்

83