பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவித்தவர் சுரதா, படிமங்களை அடுக்கிப் பாடும் உத்தியும் (Imagism), உருவகங்களைச் செறிவாகப் பயன் படுத்தும் உத்தியும் இன்றைய புதுக் கவிதையில் விரும்பி வரவேற்கப்படுகின்றன. சுரதா தமது மரபுக் கவிதை யிலேயே இவற்றை வெற்றிகரமாகக் கையாண்டு இளைஞர் களுக்கு வழிகாட்டியிருக்கிறார். சுரதாவின் வசன கவிதை யும் வெற்றிகரமான முயற்சி. நெடுந்துாரம் நடந்துவந்த மரபுக் கவிதை, சுரதா என்னும் வசந்த மண்டபத்தில் தங்கி இளைப்பாறி, புத்துணர்ச்சி பெற்று, தன் புதிய பயணத் தைத் துவங்கியிருக்கிறது.

சுரதாவுக்குப் பிறமொழி இலக்கியப் பயிற்சி இல்லை. மேலை நாடுகளின் கவிதை வளர்ச்சியைப் பற்றிச் சுரதா அறிந்திருந் தால், அவருடைய வளர்ச்சி இன்னும் வியக்கத் தக்கதாக இருந்திருக்கும். சங்க இலக்கியங்களிலும், இடைக்காலப் பிரபந்தங்களிலுமே இவர் எண்ணங்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. இருபதாம் நூற்றாண்டுச் சிந்தனைகள் இவர் படைப்பில் குறைவு. ஒரு மகாகவிக்குரிய ஆற்றல்கள் சுரதாவிடம் முழுமை பெறாமல் நிற்கின்றன. என்றாலும் தமிழ்க் கவிதை வரலாற்றில் சுரதாவுக்கு ஒர் அத்தியாயம் கட்டாயம் உண்டு,

86