பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணைப் பறிக்கும் ஒளி யு ட ம் போ டு காட்சி தரும் மோகினிப் பெண்கள், நீலவானை விட த் தெளிவான ஆழமான விழிகளால் நம்மை உற்றுப் பார்ப்பார்கள். அப்போது ஏற்படும் இனம் புரியாத கூடிணநேர மனநிலை களில் நம் வாழ்க்கையின் ஆழ அகலங்களும், நெ வரி வு சுழிவுகளும், அற்புதங்களும் நம் கண்முன் பளிச்சிடும். நம் கண்ணுக்கு முதன் முதலில் எந்தப் பொருள் தென் படுகிறதோ, அதுவே நம் அறிவை நடத்திச் செல்லும் குறியீடாக அமையும். தெளிந்த நீர்நிலைகளும், நிலைக் கண்ணாடிகளும் கனவுலகத்தை நமக்குத் திறந்துவிடும்; சோகமயமான ஒரு பேரின்பத்தில் நம் உள்ளம் ஆழ்ந்து, எல்லையற்ற காட்சிகளில் திளைக்கும். '

இத்தகைய அனுபவத்தில் திளைத்து மிகவும் நூதனமான உணர்ச்சி வெளி ப் பாடுக ளு டன் கூடிய அரிய கவிதை களைப் படைத்த கவிஞர், போதலேர் மட்டும் அல்லர்; வேறுபலரும் இருந்திருக்கின்றனர். மகாகவி பாரதியாருக் கும் க ஞ் சாப் பழக்கம் உண்டு; குயில்பாட்டும் இந்த அடிப்படையில், அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட கனவு நிலைக் கற்பனைதான். கோலரிட்ஜின் குப்ளாய்கான்' என்ற க வி ைத ைய யும் , இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.

1stuuri ar rrri di Gurr 5 Gavri ( Baudelaire Piere Charles ) 1821 ஆம் ஆண்டில் ஒய்வு பெற்ற சட்டமன்ற உறுப் பினரின் மகனாகப் பாரிசில் பிறந்தார். இவர் சிறுவனாக இருக்கும்போதே தந்தை இறந்தார்; தாய் ஒர் இராணுவ அதிகாரியை மறுமணம் செய்துகொண்டார். போதலேர் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டு, சட்டக்கல்லூரியில் நுழைந்தார்.

& 8