பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக் கடங்காத பிள் ைள யாக இருந்த இவரைக் கப்பலேற்றிக் கல்கத்தாவுக்கு அனுப்பினர் பெற்றோர். ஆனால் நடுவழியில் மொரீஷியஸ் தீவில் இறங்கிக் கொண் டார். வெப்பமண்டலத்தில் இருந்த மொரீஷியஸ் தீவில் சிலகாலம் தங் கி யி ரு ந்து வெது வெதுப்பான அனுபவங் களோடு பாரீஸ் திரும்பினார் போதலேர்.

சுதந்தரமான பண வசதியோ டு இருந்த போதலேர், பாரீசின் நவநாகரீகக் கேந்திரமான லத்தீன் குவார்ட்டர்ஸ்’ என்ற பகுதியில் கட்டுப்பாடற்ற உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டார். நீக்ரோக் கலப்பு இனக் காரிகை, கருப்பு ரதி gpm 6ör gjuheurt év (Black Venus Jeanre Duval) erstruash இவருக்கு நிரந்தரக் காதலியாகக் கிடைத்தாள். சீமாட்டி சபாத்தியர் என்ற நடிகையிடமும் அவருக்குத் தொடர் பிருந்தது. போதலேரின் சொர்க்க நரகக் கற்பனைகள், இவ்விருவர் மீதும் அவர் கொண்ட காதற் சுழியிலே சுழன்றடிக்கின்றன.

இளமையில் அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட கொள்கை 'டாண்டியிசம்'. தன் விருப்பப்படி வாழ்தல், தன்முனைப் போடு முதன்மையாக இருத்தல், நட்பு, நாடு, குடும்பம் என்ற ப ற் று க் க ைள அறுத்துச் சுதந்தர மனிதனாக வாழ்தல், பிரபுக்களை வெறுத்தல் என்பன டாண்டியிசத் தின் குறிக்கோள்கள்.

'பசி, இன்பம், அன்புக்கினிய தாய் ஆகிய எல்லாவற்றுக் கும் மேலாக நான் நேசிப்பது இலக்கியமே என்று குறிப் பிடும் போதலேர் கலை கலைக்காகவே' என்ற கொள்கை யுடையவர். ரொ மாண் டி க் கவிஞர்கள் விரும்பிப் போற்றும், 'பொங்கிவரும் மனவெழுச்சிக் கொள்கையை' இவர் ஏற்றுக் கொள்வதில்லை. கலைக்கு ஒரு தெய்வீக மரியாதையும் இவரிடத்தில் கிடையாது.

89