பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அழகு, அறம், கலை யாவும் செயற்கையானவை; அவை கல்ைஞ்ன் அல்லது கவிஞனின் தி ட் ட மி ட் ட சிந்தனை யிலிருந்து தோன்று ப ைவ கவிதையை எந்த விதப் பிரசார்த்துக்கும் பயன்படுத்தக் கூடாது. அழகின் மீது அடங்க்ர்க் காதல் கொள்ளுதலும், உள்ளத்தின் ஆழத் திலிருந்து புறப்படும் அழைப்புகளுக்கு அடிபணிதலும், தவிர்க்க முடியாதவை என்ற காரணத்தால், கலைஞனும் கவிஞ்னும் தாம் மேற் கொண்ட படைப்புப் பணிக்கு நிர்ந்த்ர் அடிமை' என்ற சிந்தனைப் போக்குடையவர் போதலேர்.

கவிதையின் கருப்பொருள் உயர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் போதலேருக்கு உடன்பாடு கிடையாது. அன்றாட வாழ் க் கை யி ல் தட்டுப்படும் சாதாரணப் பொருள்களும், இழிந்த பொருள்களுமே அழகானவை என்றும், அப்பொருள்களை அழகிய சொல் லோவியத்தால் அலங்கரிப்பதே மேலான கவிதை உத்தி (Grand Style of Poetry) orgârgy got'i ol it mit. grangp, குடிகாரன், தெருப் பிச்சைக்காரன், விபசாரி, அபலை ஆகியோரும், பழி, பாவம், தீவினை, பொல்லாங்கு ஆகிய வையும், அவர் கவிதைக்கு வி ரு ம் பி ஏற்றுக் கொண்ட கருப்பொருள்கள். இக்கொள்கைக்கு அவர் பாடியுள்ள 'சூரியன்’ என்ற கவிதை சிறந்த எடுத்துக்காட்டு. மேற்கு வாயிலில் படியும் மாலைச் சூரியனின் வர்ண ஜாலத்தால் உலகின் சாதாரணப் பொருள்களும் எப்படிப் பேரழகு பூணுகின்றன என்பதை அப்பாட்டில் சிறப்பித்துப் பாடு கிறார். இத்தகைய ரசவாதத்தை ஏற்படுத்தக் கவிஞ னானவன் மப்புமந்தாரமற்ற மேல் வானத்துக்குத் தன் ஒளிபடைத்த கண்களை உயர்த்த வேண்டும்; அப்போது பொருளற்ற அற்பப் பொருள்களும் துட்பமான பொருள் விளக்கம் பெறும்' என்று கூறு கி றார் போதலேர்.

90