பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கிய அவர் ப ய ண த் ைத யும், விவரிக்கின்றன. இளமையில் கட்டுப்பாடின்றி வாழ்ந்த தம் இழிந்த வாழ்க்கையைப் பலபாடல்களில் அவர் திரும்பிப்பார்த்து உளச்சோர்வு கொள்கிறார். தம்மை வாட்டும் உளச் சோர்வில் அழுந்திப்போவதா அ ல் லது செயற்கைச் சொர்க்கத்தில் பறப்பதா என்ற ஊசலாட்டம் பல பாடல் களில் கற்பனை நயத்தோடு எடுத்துரைக்கப்படுகின்றது. பல பாடல்களில் செயற்கைச் சொர்க்கத்தில் அவர் அடை யும் பரவசநிலை பேசப்படுகின்றது. பெண்ணால் பெறும் ஐம்புலன் இன்பத்தைக் கற்பனை செய்யாமல் ஒலி, ஒளி, மணம் இவற்றால் பெறும் இன்பங்களையே கற்பனை செய் கிறார் போதலேர். அவருடைய சொர்க்கத்தில் வரும் அடிமைகளும் ஏவலர்களும் நிர்வாணமாகக் காட்சி தருகின் றனர். அவர்களுடைய நிர்வாணம், இவ்வுலக நாகரீகத்தின் தீக்கரங்களால் தீண்டப்படாத தூய்மையின் உருவகம்.

செயற்கைச் சொர்க்கத்தில் போதலேர் அடிக்கடி திளைத்துப் பரவசப்பட்டாலும், சாவைப் பற்றிய எண்ணம் அவர் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை. நச்சுப் பூக்களின் இறுதியில் உள்ள பயணம் என்ற பாட்டில் தாம் கடலின் அலைவயிற்றில் ஆழ்ந்துவிட விருப்பம் தெரிவிக் கிறார். தாம் சென்றடைய விரும்பும் குறிக்கோள் சொர்க் மாக இருந்தாலும் சரி. நரகமாக இருந்தாலும் சரி, இனத் தெரியாத ஒன்றன் ஆழத்தில் தாம் மூழ்கிவிட விரும்பு கிறார். ஏழையின் சாவு என்ற பாடலில் சாவை மகிழ்ச்சி தரும் இன்ப உணர்வோடு வரவேற்றுப் பாடுகிறார்.

சாவே! தெய்வீகப் பெரும்புகழே! தேடலுக்குப் புலப்படாத கற்பனைக் களஞ்சியமே! ஏழை விரும்பும் போது எடுத்துச் செலவிடும் பரம்பரைச் சொத்தே !

9 3