பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டவனே !

என் உடம்பையும்

இதயத்தையும்

வெறுப்பில்லாமல் பார்க்க

எனக்கு ஆற்றலைக் கொடு ! - என்று வேண்டுகிறார் போதலேர். -

அவர் எழுதியுள்ள கடற்ப ற வை (Albeatross) என்ற பாடல் அவருடைய அவஸ்தையின் குறியீடாகவும், நச்சுப் பூக்களின் மையக் கருத்தாகவும் அமைந்துள்ளது. ஆல்பட் ராஸ் என்ற கடற்பறவை நீண்ட இறக்கைகளை உடையது. &/og, Gurrorldsor Law & 3préféâr (The prince of the clouds) என்று குறிப்பிடுவர். வானத்தை அனாயாசமாக அளக்க உதவும் அப்பெரிய சிறகுகளே, பூ மி யை அடைந்ததும் அதற்குப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றன. அவற்றைத் தூக்கிக்கொண்டு அப்பறவையால் அடியெடுத்து நடக்க முடிவதில்லை.

போதலேர் தமது ஆற்றல் மிக்க கற்பனையின் உதவியோடு சொர்க்கமண்டலத்தில் பறந்தாலும், இவ்வுலகப் பற்றும், சிற்றின்ப இச்சையும் தம்மைப் பிணித்து முடக்கி விடுவ தாக எண்ணி வருந்துகிறார் ; த ா ம் ஆழ்ந்திருக்கும் துன்பக் கடலிலிருந்து மீட்சியே கி ைட யா து என்ற வருத்தம் அடிக்கடி அவரிடம் மேலோங்கி நிற்பதுண்டு.

பாரிஸ் நகரம் .

மாறிக் கொண்டிருக்கிறது

என்னை அழுத்தும்

துயரச் சுமை

சிறிது கூட அசையவில்லை - என்று அவருடைய துயரப் பெருமூச்சு ஒருபாடலில் கேட்கிறது, மற்றொரு பாடலில்,

95.